* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.
* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!
* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.
* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!
* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.
* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.
* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.
* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).
* இதுவரை நிரூபிக்கப்பட்ட அளவில், மோட் டார் சைக்கிள் எட்டிய அதிகபட்ச வேகம்... மணிக்கு 406.62 கிலோமீட்டர்.
* ஆரோக்கியமான மனிதரின் சிறுநீரகப்பை சௌகரியமாக தேக்கி வைக்கக்கூடிய அதிகபட்ச சிறுநீரின் அளவு 453 கிராம் (2கப்).
* டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரமே லேப்டாப்களுக்கு போதுமானது!
* புவிவட்ட சுற்றுப்பாதையில் அரை கிலோ எடையை நிலைபெறச் செய்வதற்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும்.
* உயரமான கால்பந்து வீரர்களே உயரம் குறைந்தவர்களை விட அதிக ஃபவுல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார்கள்.
* 1965ல் ஜான் யங் என்ற விண்வெளி வீரர் ஜெமினி 3 விண் கலத்தில் ஒரு சாண்ட்விச்சை கடத்திச் சென்றுவிட்டார். பிரெட்டுகளில் ஏற்படும் வேதிமாற்றத்தின் விளைவாக, விண்வெளி நிலையத்திலும் விண்கலத்திலும் மின்கோளாறுகள் ஏற்படும் என்பதால், பூமிக்குத் திரும்பியதும் அவருக்குச் சிறப்பான ‘கவனிப்பு’ நடந்தது!
* நீர்நிலைகளின் அடிப்பகுதி யில் 2-3 ஆண்டுகள் கூட்டுப் புழுவாகவே வாழக்கூடிய ‘மே’ பூச்சிகள், கூடு உடைத்து இறகுகள் பெற்று பறக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றன.
* உலகத்தின் 5வது முக்கிய இணையதளமாக விளங்கும் ‘விக்கி பீடியா’ நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மொத்தம் 154 பேர் மட்டுமே!
* இதுவரை பதியப்பட்ட அடிப்படையில் பூமியின் அதிகபட்ச குளிர் அளவு மைனஸ் 89.2 டிகிரி செல்சியஸ். இது அன்டார்க்டிகாவில் 1983ம் ஆண்டு பதிவானது.
* படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்டப்படும் செயல்களாகும். அதனாலேயே நாம் கனவு காணும்போது படிக்க முடிவதில்லை!
* சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்!
* நம் கண்களால் பழுப்பு நிறத்தின் 500 ஷேடுகளைக் கூட பிரித்து அறிய முடியும்.
* மலேசியாவிலுள்ள ‘நைக்’ தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தை விடவும், ‘நைக்’ அம்பாசிடராக உள்ள மைக்கேல் ஜோர்டான் அதிக பணம் சம்பாதிக்கிறார்.
* எரேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் பென்சில் எழுத்துகளை அழிக்க ரொட்டிதான் பயன்படுத்தப்பட்டது.
* உலக மக்கள் தினமும் 5 லட்சம் மணி நேரங்களை இன்டர்நெட் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை அடிக்க மட்டுமே செலவழிக்கின்றனர்.
* அனைத்து துருவக்கரடிகளும் ஆழ்துயில் கொள்வதில்லை. கர்ப்பிணியாக இருப்பவை மட்டுமே அப்படி உறங்குகின்றன.
* தேனீயால் தேன் ஏற்கனவே ஜீரணம் செய்யப்பட்டிருப்பதால், நம் உடலிலும் எளிதில் ஜீரணமாகும்.
* ட்விட்டர் இணையதளத்தில் ஒரு நாளில் எழுதப்படுபவற்றை மட்டும் புத்தகமாக ஆக்கினாலே, ஒரு கோடி பக்கங்கள் தேவைப்படும்!
* நூலகங்களில் அதிகம் திருடப்பட்டவை என்ற சாதனையை படைத்திருப்பது கின்னஸ் சாதனைப் புத்தகமே!
* ஒரு அமெரிக்கர் சராசரியாக ஆண்டுக்கு 120 ஆப்பிள் சாப்பிடுகிறார்.
* நடந்தாலும், ஓட்டப் பயிற்சி செய்தாலும் கிலோமீட்டருக்கு 60 கலோரியே செலவாகும்.
* கடலின் சராசரி ஆழம் 4.3 கிலோமீட்டர்.
* ஈபிள் கோபுரம் கோடைக்காலத்தில் வெப்பத்தால் 15 செ.மீ. உயரம் நீள்கிறது.
* ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.
* அமெரிக்காவில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படும் கறுப்புப்பூனை, ஜப்பானில் அதிர்ஷ்டமாகக் கொண்டாடப்படுகிறது.
* மேற்கத்திய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் சராசரியாக ஒவ்வொருவரும் தினம் 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்துகிறார்கள்.
* பூமியின் 11 சதவீத நிலப்பகுதி யில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்த அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது.
* சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99 சதவீதத்தை சூரியனே கொண்டுள்ளது.
* சராசரியாக நாம் வாழ்நாளில் நடந்து செல்லும் தூரத்தைக் கணக்கிட்டால், பூமியை 4 முறை வலம் வரலாம்!
* அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் பாதிக்கு மேலான வர்கள் தன்னந்தனியே வாழ்கிறார்கள்.
* ஃப்ளமிங்கோ பறவைகளின் வித்தியாசமான வண்ணம் அவற்றின் உணவிலிருந்தே கிடைக்கிறது.
* நமது இதயம் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை துடிக்கிறது.
* உலகில் இன்னும் 3 நாடுகளில் மெட்ரிக் முறை அமல்படுத்தப்படவில்லை.
* ஆமைகள் பின்பக்க துளை வழியாக சுவாசிக்கின்றன.
* தூங்கும்போது நமக்கு தும்மல் ஏற்படுவதில்லை.
* முழுதும் எடையேற்றப்பட்ட பெரிய கப்பலை நிறுத்தும் ஆணை பிறப்பித்த பிறகும், அது நிற்க 20 நிமிடங்களாவது ஆகும்.
* க்யூப் விளையாட்டை 20 திருப்பங்களுக்கு உள்ளாகவே முடிக்க முடியும்.
* சீனாவில் மற்ற நாடுகளைவிட பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகம்.
* அமெரிக்காவில் பத்தில் 8 மோசமான பேரழிவுகள் சூறாவளியாலேயே ஏற்படுகின்றன.
* உலக மக்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பூமியின் தென்கோளப்பகுதியில் வசிக்கின்றனர்.
* தெள்ளுப்பூச்சி தன்னைவிட 130 மடங்கு உயரம் வரை தாண்டும் திறன் கொண்டது!
* உலகில் விற்பனையாகும் ஐஸ்க்ரீம்களில் மூன்றில் ஒரு பங்கு வெனிலாவே!
* அமெரிக்காவிலுள்ள ஜாக்கெரி ரெய்டெல் என்பவரின் மின் அஞ்சல் முகவரியில் மொத்தம் 411 எழுத்துகள். இதுவே மிக நீளமான இமெயில் முகவரி!
* 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கம் மட்டுமல்ல... அதிகமான தூக்கமும் இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
* இப்போதைய நிலை தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டுகளுக்குள் உலகின் ஹீலியம் இருப்பு காணாமல் போய்விடும்.
* ஆன்லைனில் நேரம் செலவழிப்பது கடந்த 6 ஆண்டுகளில் சராசரி நபருக்கு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2007ல் இந்த போதை ஒரு மாதத்துக்கு 13 மணி 30 நிமிடங்களாகத்தான் இருந்தது. கணிப்பொறித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இது பொருந்தாது.
* இங்கிலாந்தில் சராசரியாக ஒருவர் ஓராண்டு சாப்பிடும் சாக்லெட்டின் அளவு 9 கிலோ!
* கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
* உலக சூதாட்ட மார்க்கெட்டின் இன்றைய மதிப்பு 1776600 கோடி ரூபாய்!
* ‘ஆயிரத்தில் ஒன்று’ என்பது ‘பத்தில் ஒன்று’ என்பதை விட மிகப்பெரி யது என 25 சதவீதம் மக்கள் தவறாக நினைக்கின்றனர்!
* ஓராண்டில் நாம் 62 லட்சத்துக்கும் அதிகமான முறை கண் சிமிட்டுகிறோம்!
* இதுவரை அறியப்பட்ட அளவில், பிரபஞ்சத்தில் 1,000,000,000 கேலக்சிகள் உள்ளன!
* உலகில் 5 லட்சத்துக்கும் அதிக நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் உணரப்படுகின்றன.
நன்றி ;தினகரன் தளம்
பதிப்புரை ;N.K.M.புரோஜ்கான்

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval