சென்னை: ஹஜ் யாத்திரையை முடித்து சென்னை திரும்பிய ஹாஜி அப்துல்லாஹ் மவுலான விமானத்திலேயே மரணமடைந்தார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லாஹ் மவுலானா (48). இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளூர் ஜாமியா பள்ளி எனப்படும் பெரிய மசூதியில் மதகுருவாக பணிபுரிந்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஹாஜியாக நியமிக்கப்பட்டு தற்போது அப்பதவியில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவ்வருடம் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டார்.
கடந்த வாரம் ஹஜ் நிறைவடைந்த நிலையில், ஹஜ் கடமைகளை முடித்துவிட்டு புதன்கிழமை இரவு சவுதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் விமானம் ஏறிய இவர், விமானம் சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது அப்துல்லாஹ் மவுலானா மயங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து விமான நிலைய மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்
இதையடுத்து விமான நிலைய சம்பிரதாயங்கள் முடிந்து மாலை திருவள்ளூர் ஜாமியா மசூதிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு மணி நேரம் மக்களின் பார்வைக்கு வைத்தப் பின்னர் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு வெள்ளிக்கிழமை மாலை அப்துல்லாஹ் மவுலானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்துல்லாஹ் மவுலானாவுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
courtesy: Inneram
பதிப்புரை ;சவ்கத் அலி
BOSTON U.S.A.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval