Tuesday, December 2, 2014

துபாயில் 119 நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் பேர் பாடிய தேசிய கீதம்: துபாயில் உள்ள இந்தியப் பள்ளி கின்னஸ் சாதனை


கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நோக்கத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், 119 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இணைந்து பாடும் தேசிய கீத நிகழ்ச்சி துபாயில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியான ’ஜெம்ஸ்’ பள்ளியில் இன்று நடைபெற்றது.
உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு துபாய் வழங்கிவரும் வாய்ப்புகளுக்கு நன்றி கூறும் வகையில் துபாயின் 43-வது தேசிய தினமான இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சாதனை நிகழ்ச்சியில் துபாய் உள்பட 119 நாடுகளை சேர்ந்த ஜெம்ஸ் பள்ளியின் மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று ஒரே நேரத்தில், ஒரே குரலில் துபாய் நாட்டின் தேசிய கீதத்தை பாடி மெய்சிலிர்க்க வைத்தனர்.
இந்த காட்சியை ‘லைவ்’ ஆக அரபு நாடுகளில் உள்ள இதர ஜெம்ஸ் பள்ளிகளிலும் கண்ட மாணவ-மாணவிகள் பரவசத்துடன் கை தட்டி ரசித்தனர்.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கான ‘கின்னஸ்’ நிறுவனத்தின் பிரதிநிதியாக உள்ள சமீர் கல்லவுஃப் அங்கீகரித்து, முந்தைய சாதனைகளை இன்று இந்த மாணவர்கள் முறியடித்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் 40 கிளைகளை கொண்டுள்ள ‘ஜெம்ஸ் பள்ளி’ இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.வர்க்கி மற்றும் அவரது மனைவி மரியம்மா ஆகியோரின் நிர்வாகத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval