Sunday, December 14, 2014

KAFKALAND நூல் அறிமுகம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையும் பொய் வழக்குகளும் கருத்தரங்கம்

121காஃப்கா லேண்ட்  – இஸ்லாமியர்களுக்கெதிரான மனநிலையும் பொய் வழக்குகளும்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (12.12.2014) மாலை 5.00 மணிக்கு கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
இந்நூலை டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக பேராசிரியர் மனிஷா சேத்தி அவர்கள் எழுதியுள்ளார்கள்..இதனை மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் Dr.எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் MLA., அவர்கள் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். தனது உரையில் இந்துத்துவ பயங்கரவாத சதிகளுக்கெதிராக ஜனநாயக சக்திகளும், மத நல்லிணக்க போராளிகளும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் இணைந்து ஜனநாய கடைமையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நூலின் ஆசிரியரும் பேராசிரியருமான மனிஷா சேத்தி அவர்கள் தனது உரையில் நாடு முழுவதும் அரசு அமைப்புகளும், சட்டமும், நீதிமன்றங்களும் எவ்வாறு சட்ட நியாயங்களுக்கெதிராக முஸ்லிம்கள் மீது பொய் வழக்குககளை தொடுக்கின்றன என்பதையும், அவர்களின் முஸ்லிம்களுக்கெதிரான மனநிலையையும் ஆவண ஆதாரங்களுடன் விளக்கினார்.
12மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் சதீஸ் அவர்களும், இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அவர்களும், மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் தோழர் புதுமடம் அனீஸ் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சிகளை இளந்தமிழக இயக்கமும் மாணவர் இந்தியாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval