Sunday, December 7, 2014

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை..




பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.


குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்..

குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும். 

குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.
கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.
கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது…

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval