Saturday, December 27, 2014

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!


HQ Wallpapers of INDIA Independence day🎏இன்னுமொரு 50 வருடங்கள்
கழித்து வாங்கியிருக்கலாம்...

🔭அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
அத்தனை நதிகளையும்
இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

🚅நாடு முழுவதும் எப்போதோ
bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்
கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

🚇ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

🏤நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
கட்டப்பட்ட ஆயிரக்கணக்
கட்டிடங்களும் பாலங்களும்
அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

🚢நாட்டிற்கு வருமானத்தை தரும்
சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
வெள்ளைக்காரன்!

📖பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

🍞வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
கொண்டிருக்கிறது,
அடித்து வாங்க சக்தியில்லாமல்
அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

🎏மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

💴120 கோடி மக்கள் தொகையில்
70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

🇮🇷எப்படி குத்திக்கொள்ளமுடியும்
கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும்
இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

🗿நம்நாட்டு பெண்களை கூட்டம்
கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள்
கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை

🗽சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

தகவல்;சவ்க்கத்  அலி 
BOSTON,  U.S.A.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval