Wednesday, December 31, 2014

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியத்தூதரக்த்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்க இந்தியத் தூதர் சிறப்புப் பேட்டி

untitledஅமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பெயர் விவரங்களை இந்தியத் தூதரகம் மற்றும் துணைத்தூதரக )கான்சுலேட்)டில் பதிவு செய்ய வேண்டும் என இந்தியத்தூதர் டி.பி.சீதாராம்  அபுதாபி இந்தியத் தூதரகத்தில் சிறப்புப் பேட்டியளித்தார்.
அமீரகத்தில் இந்தியர்கள் சுமார் 26 இலட்சத்திற்கும் அதிகமான அளவு வசித்து வருகிறார்கள். ஆயினும் அதற்கான எந்தவித ஆதரப்பூர்வமான பதிவும் நம்மிடம் இல்லை. எனவே. அமீரகத்தில் வாழும் இந்தியர்கள், த-ங்களைப் பற்றிய சிறிய அளவு விவரங்களை அளித்தால் இங்குள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, விபத்து மற்றும் பிற அவசரகால தேவைகளுக்கு உதவ முடியும். உடல் நலக்குறைவால் எத்தனையோ பேர் திடீரென மருத்துவமனைகளில்அனுமதிக்கப்படும்போது அவர்களைப்பற்றிய தகவல்களோ உறவினர்களுக்கு விவரம் சொல்ல இயலாமல் போகிறது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையை போக்கவும் தேவையுடையவர்களுக்கு உதவிகள் வழங்கவும் முடியும் என்று தனது பேட்டியில் தெரிவித்தார்..
https://www.uaeindians.org/registration.aspx என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்
அவர் மேலும் கூறும்போது, வெளிநாட்டில் வந்த பின்பு இந்த நாட்டின் சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.
ஆலோசனை:
வீடுகளில் வேலைபார்க்கும் நபர்கள் ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்கு ஏதேனும் ஊறு விளைவிக்கப்படுவதாகவோ அல்லது கொடுமைப்படுத்தப்படுவதாகவோ எண்ணினால் உடனே அமீரகத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு போன் செய்யலாம், 24 மணிநேரமும் இந்த தொலைபேசியில் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை தெரிவிக்கலாம். அவர்களுக்கு உதவ இந்தியத் தூதரகம் தயாராக உள்ளது, 24*7 என்ற முறையில் இச்சேவை இயங்குகிறது.
அமீரகத்தில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 100 இந்தயர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது போன்ற மன உளைச்சல்களுக்கு ஆளாபவர்கள் எந்நேரமும் இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். பொருளாதார ஆலோசனை உள்பட மனவியல் ஆலோசனை அந்தந்தத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு தரப்படுகிறது, தொலைபேசி எண் : 800 46342 ( 800 இந்தியா )
திறந்த மையம் (ஓபன் ஹவுஸ்):
அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துபாயிலுள்ள துணைத்தூதரகங்களில் வேலைநாட்களில் தினமும் காலை 10 முதல் 12 மணிவரை நேரில் வந்து எவ்வித முன்பதிவும் செய்யாமல் தங்கள் குறைகளை அல்லது ஆலோசனைகளை பெறலாம்.
வீட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்புக்காக இந்தியத் தூதரகம் வேலை கொடுப்பவர்களிடம் ‘பாதுகாப்பு வைப்புத்தொகை’யாக இரண்டாயிரத்து ஐநூறு டாலர்களை வங்கி வரவோலையாக பெற்றுக்கொள்ளும், விசா முடிந்து கேன்சலில் இந்தியாவிற்கு திரும்பும்போது, வீட்டு வேலை செய்பவர்களுக்கு எவ்வித பாக்கியும் இல்லாத பட்சத்தில் அந்த பாதுகாப்புத் தொகை திரும்பி வேலைகொடுப்பவர்களுக்கே திருப்பியளிக்கப்படும், ஒருவேளை வீட்டு வேலை செய்பவருக்கு அந்த வீட்டு முதலாளி கணக்கில் பாக்கிவைத்திருந்தால் இந்த பாதுகாப்புத் தொகையிலிருந்து எவ்வளவு தரவேண்டுமோ அதை கழித்து எடுத்துக்கொண்டு பாக்கித்தொகையை முதலாளிகளுக்கு இந்தியத் தூதரகம் கொடுத்துவிடும்,, எனவே, வீட்டு வேலைக்கு வருபவர்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகளை இந்தியத் தூதரகம் அல்லது துணைத் தூதரகங்களில் தெரியப்படுத்த வேண்டும்


இவ்வாறு இந்தியத் தூதர் டி.பி,சீதாராம்  தெரிவித்தார்,

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval