சிவசேனாவின் தலைவராக இருந்த பால்தாக்ரே இறந்தபோது, மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் அக்கட்சியினர் போராட்டங்கள், பந்த் நடத்தினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பந்த்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்த பந்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேஸ்புக்கில் மாணவி ஒருவர் கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் மறைந்த தலைவர் மீதான மரியாதையை காண்பிக்க பந்த் நடத்துவது சரியான வழிமுறை கிடையாது. தாக்ரே மீதான மரியாதை காரணமாக கடைகள் மூடப்படவில்லை. பயத்தின் காரணமாகவே கடைகள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு அவரின் தோழி ‘லைக்’ போட்டிருந்தார். இதை பார்த்த சிவசேனை கட்சியின் பால்கார் வட்ட நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து கல்லூரி மாணவிகளான இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கைதுக்கு எதிர்ப்பு வலுத்த பிறகு மகாராஷ்டிரா அரசு வழக்கை முடித்துக்கொண்டது. இருப்பினும் மாணவிகளின் மன உளைச்சலை கருத்தில்கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்த விசாரணையை தானாக முன்வந்து எடுத்து நடத்தி வந்தது. விசாரணையின்போது மாணவிகள், மத, இன உணர்வுகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிர போலீசார் அதிகப்படியான ரியாக்ஷனை காண்பித்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசுதான் பொறுப்பாகும். இந்த நடவடிக்கை, அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை அபராதமாக மகாராஷ்டிர அரசு கொடுக்க வேண்டும். அல்லது, 1993ம் ஆண்டு மனித உரிமைகள் சட்டத்தின் 13வது பிரிவின்கீழ் விளைவுகளை அந்த அரசு சந்திக்க வேண்டிவரும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval