சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும், வட இந்தியாவின் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது.ஒரு மருத்துவ மூலிகையாகும்,
ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.
இதன் மணம், சுவை, செரிமானத் தன்மைக்காக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
சீரக தண்ணீர்
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும், நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசியை தூண்டும்.
வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த கஷாயத்தைக் கொடுக்க வாந்தி நிற்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
சீரக சாதம்
அரைக்க
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் – 2
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் – 2
தாளிக்க
பெரிய வெங்காயம் – ஒன்று
கடுகு – தாளிக்க
பூண்டு – 5 பல்
வேர்கடலை – சிறிது
உளுத்தம் பருப்பு – சிறிது
கடலை பருப்பு – சிறிது
மல்லி தழை – சிறிது
எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
பெரிய வெங்காயம் – ஒன்று
கடுகு – தாளிக்க
பூண்டு – 5 பல்
வேர்கடலை – சிறிது
உளுத்தம் பருப்பு – சிறிது
கடலை பருப்பு – சிறிது
மல்லி தழை – சிறிது
எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
செய்முறை
வெங்காயத்தையும், மல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை கொஞ்சம் பெரியதாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை போட்டு வறுக்கவும்.
நன்கு சிவந்தததும், வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து தாளிக்கவும். இதற்கிடையில் அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பின் அரைத்த பொடியையும் சிறிது மல்லி தழையையும் சேர்த்து தாளித்து, தேவையான உப்பை சேர்க்கவும்.
நன்கு அனைத்தும் கலவையாகும்படி மிதமான சூட்டில் வதக்கவும். இல்லை எனில் சில சமயம் கருகிய வாசம் வந்துவிடும்.
சூடான சாதத்தை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். மீதமுள்ள மல்லி தழையை தூவவும். சூடான சத்தான சீரக சாதம் ரெடி.
சீரக கஷாயம்
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval