யோசிக்க யோசிக்க நரம்புகளின் புடைப்பில் இயலாமை கொதிப்பதை வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிகிறது..... நடந்தாலும் லஞ்சம்.. கிடந்தாலும் லஞ்சம்....வேலை செய்யவும் லஞ்சம். செய்யாமலிருக்கவும்
லஞ்சம்....பனிக்குடத்தில் ஆரம்பித்து பள்ளிக் கூடம் தொடர்ந்து மண் சட்டி உடைக்கும் வரை லஞ்சம் தன் தலையை விரித்தே ஆடுகிறது... ஆட்டுவிப்பது சாத்தனின் குணம்.. ஆடுவதில் சுகம்
இருக்கத்தான் செய்யும் மானுட ஜென்மத்துக்கு....
இந்தத் துறை, அந்தத் துறை, எந்தத் துறையை எடுத்தாலும் லஞ்சம்.... சொல்லிப் பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும், மிஞ்சிப்பார்த்தும் முடியாத கோபம் சுய பச்சாதாபமாய் மாறி எழுத மட்டுமே முடிகிறது.... வேறு என்னதான் செய்வது...?
இது யாரையும் திருத்தி விடும் என்பதற்காக எழுதவில்லை. சூனியம் போல், புது சூத்திரம் போல் மெல்ல ஆக்கிரமிக்கும் இந்த லஞ்ச வளையத்தில் சிறு மீனாய் அல்லது சிறு புழுவாய் நான் மாட்டிக் கொள்ளவே கூடாது என்பதற்கான தவங்களை கலையாமல் பார்த்துக் கொள்ளவே எழுதுவதாய் எரிந்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய், தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட பூமியின் உயிரினங்கள் இம்
மட்டும் வந்து சேர்ந்திருக்கின்றன. நான், நீங்கள், அவர், இவர் என எல்லாரும் ஒரு நாள் இல்லாமல் போய்விடுவோம்....நம்மை போலவே ஒரு கூட்டம் இதே போல் இந்த பூமியை ஆட்சி செய்யும். அந்த ஆட்சியில் அவர்களின் முன்னோர்களாகிய நாம், மனக் கூண்டில் மண்டியிட்டுக் கிடப்போமே.... அப்போது அழுது துடிக்கும் ஆன்மாவின் கதறலுக்கு வலி கூடத் தெரியாது. காட்டை அழித்து மழையில் தீ வைத்த பெருமை
நம் மானுடத்த்தையே சாரும். சத்தியமாக எந்த லஞ்சத்தாலும் மழையை வாங்கி விட முடியாது....
சீட்டுக் கட்டு போல உதிர்ந்த கட்டிடம், யாரின் லஞ்சவெறி? தனிமனித ஆசையா? தனி மனித கூட்டத்தின் பேராசையா......? அத்தனை பணத்தை சேர்த்து வைத்து, அடுத்த தலைமுறையை சோம்பேறியாக்கும் கீழ்மட்ட யோசனையின் பலிகடாக்கள் 61 அப்பாவி உயிர்கள் என்றால் என்ன செய்து எதை மாற்ற? அல்லது எதை மாற்றி எதை செய்ய? மனித உடல்கள் மீது அடுக்குமாடி கோபுரங்கள்,நியாயமா? இங்கே, அடுக்கு மாடி
குடியிருப்புகள் கடவுளின் கோபுரங்களாக தோற்றமளிக்க, விளம்பரம் செய்யும், யுக்திகளின் மட்டமான மொட்டை மூளைக்குள் எச்சமிடும் கூடிழந்த பறவைகளின் துயரம் தெரியுமா?
மானுட ஜென்மங்களே, உண்டு உறங்கும் உடைக்கு, எத்தனை தேவையோ, அத்தனைதான் வாழ்வின் அர்த்தங்கள். இன்னொருவன் பசிக்கும் நீயே உண்பது, பிணம் தின்னும் கழுகுகூட செய்யாத செயல். இதற்காகவே இத்தனை போராட்டம். எத்தனை பலி கொடுத்து
வாங்கிய பரிணாமம் இது. மீண்டும் கற்கால மனிதத்தை நோக்கி படையெடுத்து, கற்கால மனிதன் செய்யாத தவறுகளையும் அவர்களின் மேல் போட்டு விட கற்றுத் தந்ததா இன்றைய நவீனம்.... ?
ஆண்களின் உள்ளாடை விளம்பரத்துக்கே பெண்களை, உடன் நடிக்க வைக்கும், வக்கிர வேதாந்தங்களை நோக்கியா இந்த மனித இனம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.....? பொய், பித்தலாட்டம், கலப்படம், அத்துமீறல்,.......... யோசிக்க யோசிக்க உடலில் கண்ணுக்கு தெரியாமல் நெளிகிறது மானுட புழுக்கள்....அரசியல், ஆன்மிகம், அறிவியல் என எங்கும் கொலோச்சுக்கிறது லஞ்சம்... லஞ்சம் எதையும் சாதித்து விடும் என்பதே
கட்டிடம் சரிந்து விழுவதும், முட்டாள்கள் மந்திரியாவதும், ஆற்றோடு பாலங்கள் அடித்துப் போவதும்...மரத்துக்கு மரம் கிளைகள் போல சிறுமிகள் தூக்கில் தொங்குவதும், கள்ள ஓட்டிலிருந்து, நல்ல ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்வதும், பிடிக்காதவனை வண்டி ஏற்றிக் கொல்வதும், ஜோடிக்கப்பட்ட போதைக் கேஸ்கள், முகத்தில் ஆசிட் வீச்சு, கொன்று கிணற்றில் போடுவது..... அய்யய்யோ..... எதைப்
பற்றியும் கவலைப் படாத ஒரு கூட்டம், முந்தின நாள் இரவே தனியார் ஆங்கில பள்ளியின் வாசலில், சொம்பு தண்ணீரோடும், பற்பசை உபகரணங்களுடன், தலையணையோடு கிடக்கிறது....
எதிரே சற்று தள்ளி, கொசு வளர்க்க பாடுபட்டு தூங்கும் சாலைவாசிகள் தனிக்கதை. அவுங்களுக்கெல்லாம் ஒட்டுரிமையே இல்லையாம். வல்லரசு புல்லரசுன்னு யாராவது பேசினால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.....
ஆயிரம் ரூபாய்க்கு, கொலை பண்றவனும், கட்டி வைக்கப்பட்ட மாட்டுடன் வன்கலவி செய்பவனும் வேறொரு தனிக்கதை....
சாதி, சமயம், பூதம் பேய்ன்னு... அது ஒரு ட்ராக்.............அப்பப்பா...... முடியலடா......... ஒரு தடவை பிறந்து, கண்டும் காணும் உலகம், சுழற்சியில் பிரபஞ்சத்தில் விதைத்துக் கொண்டே தான் இருக்கிறது நிஜங்களை..... நிஜங்களை உள் வாங்கும் சக்தியை மனிதன் இழந்து கொண்டே வருகிறான். நவீனம், இன்னொரு வள்ளுவனை பிறக்கச் செய்யவே இல்லை........ தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்று பேசும் போது கூட கோட்
சூட்டுதானே போடுகிறோம்.... அத்தனை முரண்பாடுதானே மனிதனை உடன் பட வைக்கிறது....
தன் பங்கிற்கு சமூக வலைத்தளங்கள், அறிவை வளர்த்து, வளர்த்து, அபாயகரமான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது இளைய சமூகத்தை. நான்தான் எதுவும் சாதிக்கவில்லை.. என் பிள்ளையாவது சாதிக்க வேண்டும் என்று தனக்கு மட்டுமே பிடித்த ஏதாவது ஒரு படிப்பில் தன் பிள்ளையை சேர்த்து விட்டு, தன் அலுவலகத்தில் பெருமையான அரட்டை அடிக்கும் பெற்றோர்களின் கிறுக்குத்தனங்களை யார் சரி
செய்வது?
கொடுங்கோழைகள் தூக்கில் அல்லவா தொங்கி விடுகிறார்கள். கேள்வி கேட்காதவன் பதிலைப் பற்றி கவலையின்றி தூங்குகிறான். கேட்டவன், தூங்க வைக்கப் படுகிறான்...."கடைசியில் எல்லாம் அவன் பார்த்துக்குவான்' என்று மேல் நோக்கி கை காட்டுகிறோம்...வானவேடிக்கை என்னவென்றால், மேல் காட்டிய கை, கீழ் நோக்கி திசை மாறுவது தான்....எல்லாம் மாயை, காட்சிப் பிழை என்பவன், கல்லறை பற்றிக் கவலைப்
படுவதில்லை. கல்லறையிலும் மதத்தை நுழைப்பவனுக்கு யார் லஞ்சம் தந்து புரிய வைப்பது வாழ்கையை ....?
"என்னடா பொல்லாத வாழ்க்கை... இதுக்கு போய் அலட்டிக்கலாமா?"......வாய் முணு முணுங்கும் பின்னிரவு யோசனையில் கோரச் சிரிப்பு சிரிக்கும் இயற்கை, தன் கடமையைச் செய்யும்.
ஒரு பய லஞ்சம் தர முடியாது சுனாமிக்கும் பூகம்பத்துக்கும்......
-- கவிஜி --

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval