Thursday, July 3, 2014

உமர் (ரலி) அவர்களை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம்

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
வீட்டுக்கு வருகைத் தந்தார்கள்.
உலகத்துக்கெல்லாம் அருட் கொடையாக
அருளப்பட்ட நபிகளார் (ஸல்) அவர்கள்
ஒரு சிறிய வீடொன்றில் வசித்து வந்தார்கள்,
மஸ்ஜிதுன் நபவியை தொட்டு அடுத்ததாக.
அவர்கள் வசித்து வந்த வீடு இப்போது,
மஸ்ஜிதுன் நபவியுடன் சேர்க்கப் பட்டுள்ளது.
ஆனால், அன்றோ வீட்டின் சுவர்கள்
மண்ணாலும், கற்களாலும்,
கூரைப்பகுதியோ பனை ஓலைகள்,
தரையோ மண் கொண்டு அமைக்கப்
பட்டிருந்தது.
நபிகளார் (ஸல்) அவர்களின் அனுமதியைப்
பெற்று வீட்டினுள் நுழைந்த உமர் ரலி அவர்கள்
நபிகளாருக்கு சலாம் சொல்லி அமர்ந்தார்கள்.
தரையில் அமர்ந்த உமர் ரலி அவர்கள் நபிகளார்
(ஸல்) அவர்கள் வீட்டை முதன் முதலில்
முற்றிலுமாக ஒரு பார்வை பார்த்தார்கள்.
படுக்கை என்று ஒன்று இல்லாத அறை,
நபிகளார் (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பின்
மீது படுத்திருந்தார்கள்,
அவர்களது பாதி உடலோ தரையில். அந்த
விரிப்போ மிக கடினமானதொன்று. அந்த
விரிப்பின் அடையாளங்கள் நபிகளாரின் மேனியில்
பதிந்திருந்தது. அவர்கள் அணிந்திருந்த
ஆடையும் மிக கடினமானதொரு ஆடை. அந்த
அறையில் துணிகள் வைப்பதற்கான
அலமாரியோ, நல்ல கூடிய
உணவு பொருட்களோ, சொகுசான
மெத்தையோ இல்லை.
இவைகளை கவனித்த உமர் ரலி அவர்களின்
கண்களின் கண்ணீர் கொட்டத் தொடங்கியது.
நபிகளார் ஸல் அவர்கள் கேட்டார்கள் உமரே,
உம்மை அழ வைத்தது எது என்பதாக. உமர்
ரலி அவர்கள் கூறினார்கள், என்னால்
எப்படி அழாமல் இருக்க முடியும்? படுக்கையின்
அடையாளங்கள் உங்கள் முதுகில், இந்த
அறையிலோ சுற்றி ஒன்றுமில்லை. அதன்
பொருட்களின் மதிப்போ ஒன்றுமில்லாதது.
ஆனாலும், நீங்கள் எல்லாம் வல்ல
அல்லாஹ்வால் இறைத் தூதராக
தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
ரோம, பாரசீக அரசர்கள் நல்ல சொகுசான,
ஆடம்பரமான வாழ்வு வாழ்கின்றனர்.
அவர்களது இருக்கையோ தங்கதாலானது.
அவர்களது ஆடையும்,
படுக்கையுமோ விலையுர்ந்த
பட்டாலானது என்றார்கள்.
ஆனால் உங்களிடம்
இருப்பதோ இவை மட்டுமே...
கருணையின் வடிவான
முகம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள்
உமரை நோக்கி புன்னகைத்தார்கள்,
கருணையான் பார்வையுடன் கேட்டார்கள்,
உமரே உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? நாம்
நமது செல்வங்கள், சந்தோசங்கள்,
வசதி வாய்ப்புகள் என எல்லாம் நிரந்தரமான
மறுமையில் பெற உள்ளோம் என்பதில்.
இவ்வுலகின் அரசர்கள்
அவர்களது சந்தோசங்களின்
பங்கை இங்கேயே பெற்றுக் கொண்டனர்.
இருப்பினும் அவர்கள் இறப்புக்குப்
பின்பு இவையெல்லாமே அவர்களுக்கு உபயோகமற்றதாக
ஆகிவிடும். நமக்கு சேர வேண்டிய
பங்கு பிந்தி வரும், ஆனால்
நமக்கு கிடைத்தது நம்மிடம்
நிரந்தரமாகவே இருந்துவிடும் என்பதாக.
அல்ஹம்துலில்லாஹ்,
இதுதான் நமது கனமணி நாயகம் வாழ்ந்த
வாழ்க்கை. சில மாதங்கள் உன்ன
உணவின்றி பட்டினியாக, நல்ல உடையின்றி,
வாழ்க்கை வசதியின்றி. ஆனாலும் அவர்கள்
இவைகளைப் பற்றி அஞ்சியதில்லை, கவலைக்
கொண்டதில்லை.
மறுமை மறுமை என்றே வாழ்ந்தனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்
ஒவ்வொருவருக்கும், இம்மை வாழ்வின் மீதுள்ள
மோகத்தை அகற்றி,
மறுமை பற்றி எண்ணங்களை அதிகரிக்க
வைத்து, அதிலேயே வாழ்ந்து, மரணித்து,
மறுமையில் வெற்றி பெரும் வாய்ப்பைத்
தந்து அருள் புரிவானாக.
ஆமீன்... ஆமீன்... யா ரப்பில் ஆலமீன்.

1 comment:

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval