பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்ததில் 140 பேருக்கு மேல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி இன்று காலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி லாகூரிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் அஹ்மத்பூர் ஷரிகா எனும் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்தது. இதனால் டேங்கரிலிருந்து பெட்ரோல் வெளியேற ஆரம்பித்தது.
இதனைக் கண்ட அருகிலிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கசிந்த பெட்ரோலை சேமிக்க முயற்சித்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக் பெட்ரோல் டேங்கரில் தீவிபத்து ஏற்பட்டது. தீ பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதனால் தப்பிக்க வழியின்றி 140க்கும் மேற்பட்டோர் உடல்சிதறி உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பஹவல்பூர் ஒருங்கிணைப்பு அதிகாரி ராணா சலீம் அப்சல் கூறும் போது “ பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிடாது மிகப்பெரிய கொடூரம். பெட்ரோல் டேங்கர் லாரிக்கு அருகில் யாரோ ஒருவர் சிகரெட் பிடித்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் “123 பேர் மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும், படுகாயமடைந்த 100 க்கும் மேற்பட்டோர் பஹவல்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், விக்டோரியா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று அவர் கூறினார்
courtesy;News7
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval