பர்சில் பணம் வைத்துக் கொள்ளாமல் தேவைப்படும் போது பட்டனைத் தட்டி பணத்தை எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் எங்கு எப்போது நடைமுறைக்கு வந்தது என்பதை இப்போது பார்க்கலாம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜான் ஷெபர்ட் பரோன். இவர்தான் முதல் முதலாக ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டு பிடித்து உலகத்திற்கு அளித்தவர். Related Videos 01:43 மூன்று மாதங்களாக மூடியே கிடக்கும் ஏடிஎம்கள்.. பணம்.. 02:45 ஆர்கே நகரில் ஓட்டுக்கு பணம் வழங்கும் வீடியோ.. 01:59 ATM-ல் கூட காணாமல் போகும் தமிழ்!-வீடியோ.. பார்க்லேஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்துவிட்டு சும்மா வீட்டிலா வைக்க முடியும். பரோன், பார்க்லேஸ் வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். அதன்படி 1967ம் ஆண்டு பார்க்லேஸ் வங்கியின் கிளை ஒன்றில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டது. ஏடிஎம்-யின் பொன்விழா இதுதான் மக்களின் பயன்பாட்டிற்காக லண்டன் என்பீல்ட்டில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்ட முதல் ஏடிஎம் இயந்திரம். உலகின் முதன் முதலில் வைக்கப்பட்ட இந்த இயந்திரத்திற்குதான் இப்போது வயது 50. சாக்லெட் போல் பணம் எடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு எது தேவை என்றாலும், டாலர், பவுன்ஸ் என அவர்களது பணத்தை இயந்திரத்தில் செருகினால் போதும். தேவையான சாக்லெட் போன்ற பொருட்கள் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். அதுதான் ஏடிஎம் இயந்திரத்தை வடிவமைக்க பரோனை தூண்டியுள்ளது. 3 மில்லியன் ஏடிஎம் இந்த இயந்திரம் லண்டனில் அறிமுகம் செய்த பின்னர், ஒன்பது நாட்களுக்கு பின் ஸ்வீடன் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏஎடிஎம் இயந்திரங்கள் உள்ளன. எனி டைம் மணி ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் என்று அழைக்கப்படும் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் ‘எனி டைம் மணி' என்ற அளவிற்கு மக்கள் எப்போதும் பணம் எடுக்கும் இயந்திரமாக மாறியுள்ளது. இதன் பொன்விழாவை நினைவு கூரும் வகையில் பார்க்லேஸ் வங்கி தங்க ஏடிஏம் இயந்திரத்தை வைத்து கொண்டாடி வருகிறது.
courtesy;0me India
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval