Monday, June 19, 2017

எலிக்காக, பரிசோதனை என்ற பெயரில் பெண்ணை கொடுமைப்படுத்திய பீட்டா இந்தியா

மருந்துகள் தயாரிப்பதற்கு பரிசோதனைக்காக எலி போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றது. இது மிருக வதை இதை தடுக்க வேண்டும் எனக் கூறி, ஒரு பெண்ணை எலி போன்று பரிசோதனை செய்து, பார்த்தீர்களா இவர் எவ்வளவு துண்படுகின்றார் அதே போன்ற தானே எலி போன்றவைகளுக்கும் இருக்கும் எனவே மருந்துகளுக்காக விலங்குகளை வைத்து பரிசோதனை (Animal experiment) செய்வதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என விழிப்புணர்வு என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.

விழிப்புணர்வு என்ற பெயரில் எலிக்காக ஒரு பெண்ணை, தலையை சிறைத்து , ஒரு குழாயில் தள்ளி, வாயில் தண்ணீரை ஊற்றி, சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்துள்ளது பீட்டா இந்தியா என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பரிசோதனைக்காக எலியை துன்புறத்தக் கூடாது எனக் கூறும் பீட்டா அதை பரிசோதித்து காட்டும்
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்ணை துன்புறுத்தலாமா (அவரின் சம்மதம் இருந்தாலும்) எனக் கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் விலங்குகள் மீது மருந்துகளை பரிசோதனை செய்யக் கூடாது எனில் மனிதர்கள் மீது மருந்துகளை பரிசோதனை செய்து மனிதர்களை சாகடிக்க சொல்கின்றதா பீட்டா எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval