நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெய்யை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.
குறிப்பாக, பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டுமாம். மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெய்யை, நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
நவநாகரிகம் என்ற பெயரில், இதையெல்லாம் மறந்ததால் வந்த விளைவு தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டி உள்ளது. வாரமொரு முறை, நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால், கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் இதோ:
அடர்த்தியான முடி வளரும், நல்லெண்ணெய் குளியலின் மூலம், மயிர்க்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். உடல் சூட்டை தணிக்கும், நல்லெண்ணெய் கொண்டு, வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
பொலிவான சருமம், எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும். இப்படி நல்லெண்ணெய்யில் ஏகப்பட்ட நல்ல சமாச்சாரங்கள் இருக்கின்றன.
S,R,ரவி
prop ;S,R,OIL MILL
PATTUKKOTTAI
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval