Saturday, June 3, 2017

ஏமாளிகளா??? ஏமாளிப் பெற்றோர்களா???

File:Elementary School.jpg - Wikimedia Commonsதனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு??

நல்ல வேலைக்கு போகவா??

ஆங்கிலம் சரளமாக பேசவா??

குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??

எதற்கு? ? ஏன்? ? என்று சிந்தித்ததுண்டா??

Pre kg 25000 ல் துவங்குகிறது 
Lkg 40000
Ukg 50000
1st.60000
2ND 70000
3D. 80000
4TH 90000
5TH 100000
6TO8 1.20000
9TO10. 150000
11TO12 200000 லச்சம் ஆக மொத்தம்
9,85000 ரூபாய்  இது கிராமங்கள்ல இருக்கிற CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.

சரி இதெல்லாம் இருக்கட்டும் இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா???

உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள் 
அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் . மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.

 ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து??

தமிழகத்தில் 9 ன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராக?? பொறியாளராக வரமுடியுமா?? 

உங்கள் பிள்ளையும் இவ்வாறு வரவேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தீர்கள்.  சரி இப்போது அவர்களால் மருத்துவராகவோ பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சென்று சேர்ப்பீர்கள்???

CBSE கல்லூரியிலா??
அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரிதான் இல்லையா???

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,
மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா???

இல்லை?? இல்லவே இல்லை ??இப்போது உங்கள் பிள்ளைகளோடு சாதாரண அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள்தான் படிப்பார்கள் என்பதை உணருங்கள்.???

பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் எங்கே? ?

இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?? உங்கள் பிள்ளை சாதனையாளனா??

 இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா???

உங்களுக்கு தெரியுமா TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று? ??

TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று????

 இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பேரும் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று??

ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்???

உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா??
CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று? ?

அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ??

இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே??

அரசுப்பள்ளிகள் அடித்தளமான பள்ளிகள் என்று 
அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள் அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??

வாருங்கள் குரல் கொடுப்போம் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம்.

அப்படி சட்டம் இயற்றுவார்களா? ? அரசியல்வாதிகள்  இயற்றினால் என்ன நடக்கும்? ?அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடன் நம்பிள்ளை கலெக்டர் மகனுடன் நம்பிள்ளையும் படிப்பார்கள் கட்டட வசதிகள் அதிகமாகும். சத்துணவு சத்தான உணவாகும். நவீன கருவிகள் முறையில் பாடம் கற்பிக்கப்படும் CBSE பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்படும்.
செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும். சிந்தித்து மற்றவரிடம் கொண்டு சேர்ப்போம்

என்றும் அன்புடன்
அரசு பள்ளி ஆசிரியன்.
தகவல் K,M,S,சகாப்தீன் 
Malaysia 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval