Friday, March 20, 2015

ஐஸ் வாட்டர் ஆபத்து!

Ice Waterஆஹா… ஐஸ் வாட்டர்!’ என மடக்..மடக்கென்று அருந்துபவர்களா நீங்கள்…? எனது வாட்ஸ் அப்பில் வந்த இந்த ‘பகீர்’ தகவல் இது….
கோடை வெயில் உச்சி மண்டையை பிளக்கி றது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் எங் காவது சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் நம் கை பிரிட்ஜில் உள்ள ஐஸ் வாட்டரைத்தான் தேடும்.
குளிர்ந்த தண்ணீரை குடித்தால் வெயிலின் களைப்பு சட்டென காணாமல் போவதோடு, குளுமை நம்மை வருடும். ஆனால் ஐஸ் வாட் டரை குடிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படு வதாக மருத்துவர் எச்சரிக்கிறரர்கள்.
உணவு சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண் ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதய, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உண வில் உள்ள எண்ணெய் துகள்கள், கொழுப்பு களில் இந்த குளிர்ந்த தண்ணீரால் அவை கெட்டி யாகி ரத்த நாளங்களில் படிய வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தெர்டர்ந்து ஐஸ் வாட்டரை குடிப்பது புற்றுநோய்க்கும் வழி வகுக்கும். குளிர்ந்த தண்ணீரால் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதோடு கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் செய்கிறது.
மேலும் நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, வயிற்று வலி, பக்கவாதம், தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு ஏற்படும்.
இதை அல்வா மூலம் எளிதாக கண்டறியலாம். அல்வாவை எடுத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு அரைமணி நேரம் கழித்துப்பார்த்தால் அதிலிருந்த எண்ணெய் பசை காணாமல் போயிருக்கும். மேலும் கெட்டியாக மாறி இருக்கும். அதிலிருந்த எண்ணெய் ஆங்காங்கே படிந்து வெள்ளை நிறமாக இருக்கும்.
இது போன்றுதான் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்போது உணவில் உள்ள எண்ணெய் துகள்களும், கொழுப்பும் கெட்டியாக மாறி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே குளிர்ந்த தண்ணீரை தவிர்த்து வெந்நீரை பருகினால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
ஆசியா கண்டத்தை சேர்ந்த ஜப்பானிய பெண்களின் சராசரி ஆயுட்காலம் 92. ஐப்பானிய ஆண்கள் 84 வயது வரை வாழ்கின்றனர். இதற்கு காரணம் அவர்களின் உணவுப்பழக்க வழக்கம். அவர்கள் அதிகளவில் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்து கொள்கின்றனர்.


மேலும் உணவு சாப்பிட்ட பிறகு வெந்நீர் மற்றும் கரீன் டீ அருந்துவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு காரண மாக அமைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நாமும் ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்த்தால் ஆரோக்கியமாக வாழ்வதோடு ஆயுட்நாட்களையும் அதிகரித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval