டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், தற்போது இந்த கட்சியில், உட்கட்சி சண்டை பெரும் பூதாகரமாக உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், முதல்வரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இதற்கிடையில், ’ஆம் ஆத்மி கட்சியில் நடக்கும் நிகழ்வுகள், எனக்கு மிகுந்த துயரும், வேதனையும் அளிப்பதாக உள்ளன. இந்த அசிங்கமான சண்டை, டில்லி மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம்’ என்று சமூக வலைதளமான டுவிட்டரில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரவிந்த கெஜ்ரிவால் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்களுக்கு அதிர்ப்தி தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தை தேசிய செயற்குழுவிற்கு அணுப்பி வைத்துள்ளார்.
முதல்வராக இருப்பதால் கட்சிப் பணியை கவனிக்க முடியவில்லை என்றும், டெல்லி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் கட்சியின் தேசிய அமைப்பாளராக வேறொருவரை நியமிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval