உத்தரப்பிரதேசம் மாவட்டம், பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கிர்த்தனாபூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளர் மவுலானா மெஹ்மூத் மதானி, இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர் ஏற்பட முஸ்லிம்களே காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்விழாவில் பேசிய அவர், 'நாம் சரியான பாதையை கடைபிடிக்கவில்லை. இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற கண்ணோட்டத்தை நமது எதிரிகள் ஏற்படுத்தவில்லை. மாறாக, இதைப்போன்ற ஒரு கண்ணோட்டம் உருவாக நமது சமூகத்தில் இருப்பவர்களே காரணம்.
எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு நமக்கு சாப்பாடு இல்லாமல் போனாலும் சரி, நமது பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நாம் சபதம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் படிப்புக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், இன்று முஸ்லிம்களை வெறுப்பவர்கள்கூட நாளை தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டார்.
courtesy;Malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval