Sunday, March 22, 2015

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களே தொடரட்டும் உங்கள் சமூக பணி.


தந்தி டிவி விவாதத்தில் பாண்டேயின் கேள்விக்கு ஆக்கபூர்வமான பதில் கொடுத்தீர்கள்.
தாலி பிரச்சினை 
புதிய தலைமுறை டிவி மீதான தாக்குதல்
விஸ்வரூபம் சினிமா பிரச்சினை என
கேள்விகள் கேட்கப்பட்டன.


எல்லாவற்றுக்கும் விளக்கமான பதில் சொன்னார் பேராசிரியர்
மற்ற முஸ்லிம் அமைப்புகள் செய்கின்ற அதையும் இதையும் ஏன் கண்டிக்கவில்லை என்று எங்களை கேட்கிறீர்களே....
சுப்ரமணியசுவாமி மசூதிகள் பற்றி பேசிய பேச்சை ஏன் மற்ற இந்து அமைப்புகள் கண்டிக்கவில்லை.
பிரதமர் ஏன் கண்டிக்கவில்லை. இதை யாரிடமாவது கேட்டீர்களா ?" என்று பதில் கேள்வி ஒன்றை ஜவாஹிருல்லா கேட்டார்.
பாண்டேயால் பதில் சொல்ல முடியவில்லை.
பேராசிரியரின் பதில் தன் கேள்வியின் வாயை அடைத்துவிடும் என்று தெரியும் போதெல்லாம் பேராசிரியரை பேச விடாமல் குறிக்கிட்டு கேள்வி கேட்டு சமாளித்தார் பாண்டே.
பேராசிரியர் பதிலுக்கு பாண்டே குறிக்கிட்டு பேசாமல் இருந்திருந்தால் ஹிந்துத்துவாவிற்க்கும் பாண்டேவுக்கும் மேலும் பல சவுக்கடி விழுந்திருக்கும்.
பொறுமையுடனும்,ஆக்கபூர்வமாகவும் பதில் சொன்ன பேராசிரியர் சமூக பணி தொடரட்டும்.
-Editor Alaudeen

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval