Sunday, March 29, 2015

நாம் யார்?


Article 1 The Holy Qur'an Surah 93. Ad-Duha (The Morning Hours ...1. நாம் யார்?
💚நாம் முஸ்லிம்கள்.

2. நம் மார்க்கம் எது?
💚 நம் மார்க்கம் இஸ்லாம்.

3. இஸ்லாம் என்றால் என்ன?
💚அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.

4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
💚இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.

5. கலிமாவை கூறு
💚 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
💚வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.

7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?
💚ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை 
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா

8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
💚ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும்.

9. ஜகாத் என்றால் என்ன?
💚பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.

10. ஹஜ் என்றால் என்ன?
💚துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.

11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
💚உடல் வசதியும், பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை 
ஹஜ் செய்வது கடமையாகும்.

12. ஈமான் என்றால் என்ன?
💚ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.

13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
💚முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.

14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
💚ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)

15. தாயும், தந்தையும் இல்லாதவர் யார்?;
💚 நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.

16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?
💚நபி ஈஸா (அலை) அவர்கள்.

17. நாம் யாருடைய பிள்ளைகள்?
💚நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.

18. நாம் யாருடைய உம்மத்தினர்?
💚நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்.

19. அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்?
💚அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.

20. மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?
💚அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.

21. அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
💚அல்லாஹ் ஷைத்தானை நெருப்பிலிருந்து படைத்தான்.

22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
💚இப்லீஸ்.

23. மனிதர்களின் எதிரி யார்?
💚இப்லீஸ. ஷைத்தான்.

24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
💚 25 பேர்

25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்?
💚அல்ல ாஹ்வை வணங்குவதற்காக.

26. அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்?
💚எல்லா படைப்பினங்களிலும் சிறந்தவனாக

27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
💚அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் என்பதாகும்.

28. இப்லீஸ் என்பதன் பொருள்?
💚குழப்பவாதி என்பது பொருள்.

29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
💚ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.

30. நம் வேதத்தின் பெயர் என்ன?
💚 அல்குர்ஆன்

31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
💚ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.

32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
💚 40 வயதில்

33. மக்கீ சூரா என்றால் என்ன?
💚 மக்காவில் இறங்கிய சூரா.

34. மதனீ சூரா என்றால் என்ன?
💚 மதீனாவில் இறங்கிய சூரா.

35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
💚குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.

36. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.

37. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

38. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.

39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
💚 114 சூராக்கள் ஆகும்.

40. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
💚 313 பேர் ஆவார்கள்.

41. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
💚14

42. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது? 
💚இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ

43. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
💚 முஹர்ரம்

44. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?
💚 ரபீயுல் அவ்வல்

45. மிஃராஜ் என்றால் என்ன? 
💚நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

46. பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
💚யர்ஹமுகல்லாஹ்.

47. திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?
💚சூரா கவ்ஸர்.

48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
💚40 வயது

49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

50. உயிரை வாங்கும் வானவர் யார்?
💚மலக்குல் மௌத்

51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?
💚6666

52. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
💚அல்ஹம்து லில்லாஹ்

53. வஹீ என்றால் என்ன?
💚அல்லாஹ்வின் செய்தி.

54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
💚 ஜிப்ரயீல் (அலை)

55. இஸ்திக்பார் என்றால ் என்ன?
💚பாவமன்னிப்பு தேடுவது.

56. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
💚பிலால் (ரளி)

57. முதல் கலீபா யார்?
💚அபூ பக்கர் சித்தீக் (ரளி)

58. மன்னிக்கப்படாத பாவம் எது? 
💚குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

59. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?
💚நபி மூஸா (அலை)

60. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
💚குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு

61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?
💚பள்ளிவாசல்

62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
💚தாயின் காலின் கீழ்.

63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.
💚 7 வயது.

64. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
💚ஃபீ அமானில்லாஹ்

65. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன? 
💚 கிராமன் காதிபீன்.

66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?
💚 எகிப்து (மிஸ்ர்)

67. இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?
💚 நபி, ரசூல்

68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
💚அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.

69. உலகம் முழுவதையும் படைத்தது யார்?
💚அல்லாஹ்.

70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
♥தொழுகை

71. திருக்குர்;ஆன் எந்த மொழியில் உள்ளது?
💚அரபி மொழியில்.

72. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
💚அளவற்ற அருளாளன்.

73. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
💚சூரா அல் பாத்திஹா

74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
💚தொழுகை.

75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
💚கஃபா.

76. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது? 
💚நரகம்.

77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
💚313 நபர்கள்.

78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன? 
💚நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.

79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
💚ஒன்று

80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
💚 நபி சுலைமான் (அலை)

81. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? 
💚ஏழுபேர். 3ஆண்கள் 4 பெண்கள்

82. ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
♥ அபூ ஹுரைரா (ரளி)

83. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) மனைவி யார்?
♥ அன்னை ஆயிஷா (ரளி)

84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
♥ சூரா தவ்பா.

85. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
♥ கதீஜா (ரளி)

86. திக்ருகளில் சிறந்தது எது? 
♥ லாஇலாஹ இல்லல்லாஹ்

87.
சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
♥ அலி (ரளி)

88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
♥ அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி)

89. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
♥ 2 ரக்அத்கள்.

90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
♥ தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.

91. நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்? 
♥ அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

92. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥ ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.

93. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.

94. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?
♥ ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.

95. சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது?
♥ ஜன்னதுல் பிர்தவ்ஸ்.

96. எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
♥ மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு

97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார்?
♥ முஸைலமதுல் கத்தாப்.

98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
♥ ஸஹீஹுல் புகாரி.

99. உண்மையான வீரன் யார்?
♥ கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன்.

100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
♥ 63 ஆண்டுகள்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval