Friday, March 20, 2015

துபாயில் சுற்றுலா பயணியை கவர ஹைட்ரஜன் வாகனம்

uae-67287சுற்றுசூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் வாகனம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டமும் துபாய் டவுனில் நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் பகுதியான துபாய் டவுனில் உள்ள துபாய் மால், துபாய் நீரூற்று, சூக் அல் பஹர் உள்ளிட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். மேலும், இரட்டை அடுக்கு வாகனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த டிராலி வாகனத்தில் ஒரு அடுக்கில் 74 பயணிகள் வரை அமர்ந்து செல்லலாம்.


இது உலகின் முதல் ஹைட்ரஜன் டிராலி வாகனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என்று இமார் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குநர் அஹமது அல் மத்ரூசி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval