Thursday, March 26, 2015

இன்டர்நெட்டின் தாக்கம் எப்படி இருக்கின்றது..!

internet-localதொழில்நுட்பங்களின் வளர்ச்சி நம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து விட்ட நிலையில் இன்டர்நெட்டின் தாக்கம் அன்றாட வேலைகளை எளிமையாக்கியுள்ளது என்று சொல்லலாம்.
இனி வரும் காலங்களில் இன்டர்நெட்டின் தாக்கம் நம் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்…
கார் ட்யூனிங் ‘ஸ்மார்ட்’ எனும் தொழில்நுட்பம் கார்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதோடு சரியான நேரத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை பரிந்துரைக்கும்.
உடல் நலம் நோயாளிகளுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும் போது மருத்துவருடன் இன்டர்நெட் மூலம் இணைப்பில் இருந்து கொண்டு கவனிக்க முடியும்.
மின்சக்தி வீட்டில் உபயோகிக்கப்படும் மின்சாதனங்கள் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும் படி வடிவமைக்கப்படலாம்.
போக்குவரத்து ரியல் டைமிற்கு ஏற்ப சிக்னல்கள் மாறும், மேலும் ஆம்புலன்ஸ் ஏதும் வந்தால் அதற்கு சாதகமாக சிக்னல்களை மாற்றியமைக்கும்
மளிகை குளிர்சாதன பெட்டிகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறைந்தால் தானாக எச்சரிக்கை செய்யும்.
அலாரம் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப அலாரம் செயல்படும்.குழந்தை குழந்தையின் உடல் நலத்தை பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
உடல் நலம் அணியக்கூடிய கருவிகளின் வளர்ச்சி இன்னும் பல உடல் நலம் சார்ந்து அதிக தகவல்களை வழங்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval