பா.ஜ.க.வின் 100 நாட்கள் ஆட்சி குறித்து புத்தகம் வெளியிட்டுள்ளது காங்கிரஸ். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதற்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறிதளவும் நிறைவேற்றாத பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபமே காரணம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ‘மோடி அரசும்-100 நாட்கள் தவறான ஆட்சியும்’ என்ற தலைப்பில் சிறு புத்தகத்தை இன்று காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இப்புத்தகம் பற்றி காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ.க.வின் 100 நாட்கள் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தும் வாசகங்களாகவே இருக்கிறது.
எதுவும் நிறைவேறவில்லைமத்தியில். இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியே இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது.’ என்றார். மோடி அரசின் தோல்விகளை பட்டியல் போட்டு காண்பித்துள்ளதாம் இந்த புத்தகம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval