அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காதுஹு இஸ்லாமிய பெண்களுக்கு எடுத்து காட்டாக வாழ்ந்த உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் ; காதல் என்ற பெயரில் மார்க்கத்தை விட்டு வெளியேறும் ஆண்கள் , பெண்களுக்காக !!!)அல்லாஹ் நம்மை பாதுக்கப்பானாக ! " காதல் என்ற கருமாந்திரம் பெயரில் ஒரு சிலஅற்ப காரணங்களுக்காக புனித மார்க்கமான இஸ்லாத்தை விட்டு வெளியேறும் பெண்களே / ஆண்களே !கேவலம் சில நிமிடங்கள் சுகத்திற்க்காக அல்லாஹ்வை மறுத்த காபிர்களுடன் மட்டும் தான் வாழ்வேன் என்று மார்க்கத்தையும், தீனையும் தூக்கி போட்டு செல்லும் பெண்களே /ஆண்களே !நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உம்மு சுலைம் (ரலி ) அவர்களின் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவம் ; நபி (ஸல் ) அவர்களுக்கு பல வருடங்கள் பனிபுரிந்த சஹாபி அனஸ் (ரலி ) அவர்களின் தாயார் உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் ; அனஸ் (ரலி ) அவர்கள் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் விதைவையாக இருந்தார்கள் .. அப்பொழுது அபு தல்ஹா என்ற சகோதரர் உம்மு சுலைம் (ரலி ) அவர்களிடம் வந்து உங்கள் நிலைமயை நான் கேள்வி பட்டேன்.. உங்களை நான் திருமணம் செய்ய ஆசை படுகிறேன் என்று தன் விருப்பத்தை கூறுகிறார்கள் .. அபு தல்ஹா பெரிய வசதியானவராகவும், அறிவுள்ளவராகவும் , அழகுடயாரகவும் இருந்தவர் ..அதற்க்கு உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் ; நீங்கள் வசதியானவராக , அழகானவராக , அறிவுள்ளவராக இருக்கலாம் .. ஆனால் அபு தல்ஹா அவர்களே உங்களிடத்தில் தீன் இல்லை.. நீங்கள் ஒரு காபிர் .. நான் ஒரு முஸ்லிம் .. நீங்கள் எரிந்து விடக்கூடிய மரத்தையும் , உடைந்து சிதறக்கூடிய கல்லையும் வணங்குகிரீர்கள்! ஆனால் நான் அவற்றை எல்லாம் படைத்த அல்லாஹ்வை வணங்கி கொண்டிருக்கிறேன் .. நீங்கள் எரிந்து சாம்பலாகும் நெருப்பை வணங்குகிரீர்கள்! ஆனால் அதை படைக்கவும் , அணைக்கவும் தெரிந்த அல்லாஹ்வை வணங்கி கொண்டிருக்கிறேன் ! இன்னும் யார் நாடினால் எதுவம் நடக்குமோ , அவன் நாடாவிட்டால் எதுவும் நடக்காதோ அவனை வணங்கிகொண்டிருக்கிறேன் ! நீங்கள் என்னை திருமணம் செய்ய நினைத்தால் அதற்க்கு மகராக அல்லாஹ்வின் மார்க்கத்தை நீங்கள் ஏற்று கொண்டால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என பதில் அளித்தார்கள் !!!இவர்கள் அல்லவா இஸ்லாமிய பெண்மணி !!! அழகும் , செல்வமும் கொண்ட ஒருவர் அதுவும் இவர்கள்விதவையாக இருக்கும் பொழுது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என இஸ்லாத்தை ஏற்க வைத்து தீனில் உறுதியாக இருந்தார்கள் .
|
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval