Saturday, September 27, 2014

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா சம்மன் அனுப்பி உள்ளது

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று இறங்குவதற்கு முன்னதாகவே அங்குள்ள நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. பிரதமராக பதவியேற்ற பிறகு, நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விதித்திருந்த 9 ஆண்டு கால விசா தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை தாங்கியதாக கூறி, அமெரிக்கா ஜஸ்டிஸ் சென்டர் என்ற அரசு சாரா மனித உரிமை அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நியூயார்க் மாவட்ட நீதிமன்றம், இந்த சம்மனுக்கு 21 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. பதிலளிக்க தவறினால் இந்த வழக்கின் தீர்ப்பு மோடிக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிற்கு வெளியே நடைபெறும் குற்றங்கள் குறித்து அமெரிக்கா வாழ் குடிமக்கள் வழக்கு தொடர ஏதுவாக ஏடிசிஏ என்னும் சட்டம் 1789ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
நன்றி ...புதிய தலமுறை and இந்தியன் எக்ஸ்பிரஸ்


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval