Sunday, September 14, 2014

பாத்திமா (ரலி) வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும்.

ஒரு முறை பாத்திமா (ரலி) அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கயையாய் இருந்தார்கள்.அப்போது அவரது கணவர் அலி (ரலி) அவர்கள் "எனதருமை மனைவியே! தங்களுக்கு ஏதாவது திண்ண விருப்பம் உள்ளதா?சொல்லுங்கள் வாங்கி தருகிறேன்."என்றார்கள்.அதற்கு பாத்திமா (ரலி) "எனதன்புக் கணவரே! நமது திருமண சமயத்தில் எனது தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு சில ஆலோசனைகள் செய்தார்கள்.அதில்,

"பாத்திமாவே!உன் கணவரிடம் அது வேண்டும்,இது வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்காதே.ஏனெனில் நீ கேட்ட பொருளை உனது கணவர் வாங்கித் தராவிட்டால் மனைவியின் ஹக்கை நிறைவேற்ற முடியாத நிலையில் அந்தக் குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.ஆகவே உனக்கு எது வேண்டுமோ அதை அல்லாஹ்விடம் கேட்டு வங்கிக் கொள்."
என்று கூறினார்கள்.

எனதன்புக் கணவரே!எனக்கு எது வேண்டுமோ அதை என் ரப்பிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.தாங்கள் சிரமமடைய வேண்டாம் என்று அன்பாக கூறிவிட்டார்கள்.

கணவனிடன் அதை வாங்கித் தாங்க,இதை வாங்கித் தாங்க என்று வாங்கி குவிக்கும் நம் காலப் பெண்கள் சற்று சிந்திக்க வேண்டும்.கண்வனை சுரண்டி மொட்டையடித்து அவனை ஹராமில் கொண்டு போய் விடுவதற்கும் எம் பெண்கள் படித்துக் கொண்டார்கள் எனவே எம் பாத்திமா (ரலி) வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval