Monday, September 8, 2014

சவுதி அரேபியாவில் மனதை உறைய வைக்கும் உண்மை சம்பவம் !

                                                     !                                                  
அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாகுக.


சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வசித்து வருபவர் அப்துல்லா இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்

தனது வீட்டிர்கு உறவினர்கள் விருந்துக்கு வரவே அவர்களுக்கு சிறப்பான விருந்து படைத்து உபசரிப்பதர்காக ஆடுகளை அறுத்து உரித்து பதனிடும் அந்த இடத்திர்கு இறச்சி வாங்க செல்கிறார்

உடன் தனது ஐந்து வயது மகனையும் அழைத்து செல்கிறார்

அங்கு சென்று தமக்கு தேவையான இறச்சியை தயார் செய்ய சொல்லி விட்டு அங்கேயே காத்திருக்கிறார்

இடைபட்ட நேரத்தில் அங்கு ஆடுகள் அறுக்க படுவதையும் அதன் தோல்கள் உரிக்க படுவதையும் வெட்ட படுவதையும் கொத்த படுவதையும் அந்து ஐந்து வயது சிறுவன் ரசித்து பார்க்கிறான்

அங்கு நடை பெற்ற காட்சிகள் அவனது உள்ளத்தில் பதிந்த நிலையில் இல்லத்திர்கு வருகிறான்

அங்கு தனிமையில் இருக்கும் தனது இளைய சகோதரனை பார்த்ததும் கசாப் கடையில் கண்ட காட்சியை நேரடியாக நாமே செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு சமயல் அறைக்கு சென்று அங்கு இருந்த கத்தியை எடுத்து வந்து ஒன்றும் அறியா அந்த ஒன்றரை வயது பாலகனின் நெஞ்சிலும் முதுகிலும் குத்தி அந்த குழந்தையின் தோலை உரிக்க முயன்றுள்ளான்

திடீர் என்று அவனின் தந்தை அங்கு வரவே அங்கு நடக்கும் நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த ஒன்றரை வயது சிறுவனை அள்ளி கொண்டு மருத்துவ மனை விரைந்தார்
மருத்துவ மனையில் நீண்ட போராட்டத்திர்கு பிறகு அந்த குழந்தை அபாய கட்டத்தை கடந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்

மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தையின் படத்தை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்

இதில் நமக்கு பல படிப்பினைகளும் பாடங்களும் உள்ளன

குறிப்பாக குழந்தைகளை தனியாக விடுவதை தவிர்ப்பதோடு குழந்தைகளின் மீது எப்போதும் பெற்றோர்களின் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சிறு குழந்தைகளின் மனங்களில் முரட்டு தனங்களையும் வெறி தனங்களையும் வளர்க்கும் காட்சிகளை காண்பதில் இருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு நமக்கு கற்று தருகிறது.

இதை அளவுக்கு அதிகமாக பகிறவும் அல்லாஹ்வுக்காக.

நன்றி.வி குளத்தூர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval