Thursday, May 25, 2017

இந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...!


இந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...!

ஒருவன் உங்களுக்கு ப்ரெண்ட் ரிக்வோஸ்ட் அனுப்புகிறான், அவனை உங்களுக்கு தெரியாது, ஆனால் அழகான படத்தை அவன் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளான். அதனால நீங்க அவனை ப்ரெண்ட்டா அக்ஸப்ட் பண்ணுறீங்க.

உங்கள் சின்ன குழந்தையின் பள்ளி முதல் நாள் அது. அவள் மிக மிக அழகாக உள்ளாள் அவளின் புது பள்ளி சீருடையில். நீங்கள் அவளை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களும் குடும்பமும் பார்ப்பதற்கு போஸ்ட் பண்ணுறீங்க.
உங்களை குழந்தையை விட நீங்கள் குதூகலமாக உள்ளீர்கள். குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு பேஸ்புக்கில் பள்ளியின் முகவரியில் 'செக் இன்' பண்ணுறீங்க. நம்பவே முடியவில்லை என் குழந்தை எவ்வளவு பெரிதாகிவிட்டாள். நாங்கள் பெருமையான பெற்றோர் என ஸ்டேட்டஸ் கூட போடுறீங்க .

அதே சமயம் நீங்கள் என்றோ ப்ரெண்ட்டாக சேர்த்த அந்த மர்ம நபர், பள்ளி சீருடையில் அழகாக உள்ள உங்கள் குழந்தையின் படத்தை அவன் போனில் டவுன்லோட் செய்கிறான். டவுன்லோடு செய்த கையேடு அதை அவனை போல 60 திருடர்களுக்கு அனுப்புகிறான்.

இந்திய பெண் வயது : 5
கருப்பு கூந்தல்
கருப்பு நிற கண்கள்
RS:70,000/-

நீங்கள் உங்கள் குழந்தையின் படத்தை மட்டும் குழந்தை திருடர்களுக்கு கொடுக்கவில்லை, குழந்தையின் பெயர் அவளின் பள்ளி முகவரி அனைத்தையும் வெள்ளித்தட்டில் வைத்து நீட்டி உள்ளீர்கள்.
மதியம் 3 மணிக்கு குழந்தையை அழைத்துவர பள்ளிக்கு செல்கிறீர்கள். ஆனால் குழந்தையை பள்ளியில் எங்கும் காணவில்லை.

உங்களுக்கு தெரியாதது, உங்களின் செல்ல மகள் 43 வயது கிழட்டு காமுகனுக்கு விற்கப்பட்டது அதுவும் நீங்கள் காலையில் பள்ளியை விட்டு வெளியேறும் முன்பே விற்கப்பட்டது. அவள் இப்போது ஒரு பையில் அடைக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவிற்கு பயணித்துக்கொண்டிருக்கிறாள். குழப்பமான பயத்துடன் அழுதுகொண்டே செல்கிறாள். இன்று அவளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த ஆளை அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இப்போது அவளுக்கு அவளின் பெற்றோர் இருக்குமிடம் தெரியாது. எங்கு சென்றுகொண்டிருக்கிறாள் என்பது தெரியாது, அவளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதும் தெரியாது.

* தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் இணைக்காதீர்கள்.

* உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

* உங்கள் குழந்தையின் படங்களை ப்ரொபைல் பிச்சராக வைக்காதீர்கள்.

இதை குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நன்மைக்கு உங்களுக்கு தெரிந்தவர்களுடன் ஷேர் பண்ணுங்கள்.

இந்த பதிவை பகிர்வதோடு நிறுத்தாதீர்கள்.. விழிப்புணர்வை பரப்புங்கள் !

நன்றி: திரு.சசிக்குமார்
இயக்குநர்,நடிகர்
நல்ல மனிதர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval