உடல் வலிமை பெற வேண்டுமானால் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் ஒரு ஸ்பூன் உலர் திராட்சையைப் பாலில் கலந்து நன்கு காய்ச்சி குடிக்கக் கொடுங்கள்.
இதனால் உடல் வலுப்பெறும். பற்களும் உறுதியாகும்.
உலர் திராட்சையில் தாமிரச் சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
தினமும் பத்து உலர் திராட்சையை வாயில் போட்டு, சிறிதுநேரம் மென்று கொண்டிருந்தால் எலும்பு மஜ்ஜைகள் உறுதிபெறும்.
தொண்டைக்கட்டு, இருமல் இருந்தால் பாலில் மிளகு, மஞ்சளுடன் சிறிதளவு உலர் திராட்சையையும் சேர்த்து காய்ச்சிக் கொடுக்கலாம்.
உடல்வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம் ஆகியவற்றோடு ஒரு ஸ்பூன் உலர் திராட்சையைச் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அது 200 மில்லியாக சுண்டும் வரை காய்ச்சி பின் வடிகட்டிக் குடியுங்கள். உங்கள் உடல்வலி இருந்த இடம் தெரியாமல் மாயமாகிப் போகும்.
கர்ப்பிணிப் பெண்கள் பாலில் உலர் திராட்சை போட்டு சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்
தினமும் பத்து உலர் திராட்சை பழங்களை, மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டுப் பாருங்கள். அதனால் உடலில் உண்டாகும் மாற்றங்களை நீங்களு நன்கு உணர்வீர்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval