அன்பான உறவுகளே வணக்கம்!🙏🏻
நியூஸ் 7 என்ற தொலைக்காட்சி பனைத் தொழிலாளிகளைப் பற்றிய சிறப்பு செய்தியை ஒளிபரப்பியுள்ளது இதைப்பாருங்கள்.
தமிழர்களின் தேசிய மரமான பனை மற்றும் அதைச் சார்ந்த தொழிலார்களின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. பனைத் தொழில் என்பதும் விவசாயத்தொழில் தான். இந்தத் தொழிலையும் நாம் காப்பாற்றியாக வேண்டும். பனைத் தொழில் என்பது ஒரு சமூகத்திற்கானது இல்லை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஆம் பனை தமிழர்களின் தேசிய மரம் அதை காப்பாற்றும் பொருப்பு தமிழராகிய நமக்கு அனைவருக்கும் இருக்கிறது. சரி இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நமது பகுதியில் உள்ள பனைமரங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் புதியதாக பனங்கன்றுகளை நட வேண்டும் மிச்சம் இருக்கும் தெழிலாளர்களுக்கு சமூக மரியாதை கிடைக்க வேண்டும் புதியதாக தொழிலாளர்கள் உருவாகும் நிலையை உருவாக்க வேண்டும். அந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வருவதற்காக நாம் பனை சார்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். நமது குழந்தைகளுக்கு பனைபொருட்களின் மருத்துவ குணங்களையும் நல்ல பயனுள்ள நன்மைகளையும் எடுத்துக்கூறி அவர்களையும் பயன்படுத்த வைக்கவேண்டும். மேலும் படித்த இளைஞர்கள் பனைத் தொழில் எளிதாகும் வகையில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை கண்டுபிடித்து உதவ வேண்டும். இதை நாம் செய்தால் கண்டிப்பாக பனைத் தொழில் மீளும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் யார் யாரோ வந்து பிழைப்பு நடத்தி நல்ல நிலையில் வாழ்கிறார்கள் ஆனால் நமது உறவுகளான பனைத் தொழிலாளிகளும் நமது தமிழ்த் தேசிய மரமான பனைமரமும் அழிவை நோக்கி நகர்கிறது இதை நாம் அனுமதிக்கக்கூடாது. வாருங்கள் உறவுகளே தமிழராக ஒன்று இணைந்து நமது அடையாளங்களை காப்போம்.🙏🏻
இவண்: ஆ.பி.சுரேஷ் தமிழன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval