Friday, May 26, 2017

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 17 கிலோ தங்கத்தை கையாடல் செய்த வங்கி ஊழியர்!


வங்கியில் அடகு வைக்கப்பட்ட 17 கிலோ தங்கத்தை கையாடல் செய்த வங்கி ஊழியர்!வேலூர் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 17 கிலோ தங்கத்தை வங்கி ஊழியர் ஒருவர் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, வேலூர் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சிவகுமார் ஆய்வு செய்தார். 

அப்போது 17 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதன் மதிப்பு 4 கோடியே 75 லட்சம் ரூபாய் எனவும், வங்கி ஊழியர் பாபு என்பவர் நகையை கையாடல் செய்திருப்பதும் தெரியவந்தது. 

இதனை அடுத்து நகை கையாடல் தொடர்பாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் பாபு மீது சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் மணப்புரம் கோல்ட் லோன் நிறுவனத்தில் நகை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் பாபு வேலூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
courtesy;News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval