பல்லடம் அருகே விசைத்தறி தொழிலாளியை எரித்தும், அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்தும் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி தங்கவேல், செல்வம் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் தங்கவேலுவிடம் செல்வம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 2015 ம் ஆண்டு தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்த செல்வம், தங்கவேலுவையும், அவரது மகளையும் கடத்தி சென்றுள்ளனர்.
பல்லடத்தில் தங்கவேலுவை எரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் தங்கவேலுவின் மகளை கோவைக்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முகமது ஜியாவுதீன், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வம் மற்றும் தங்கராஜ் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றச்சாட்டில் தொடர்புடைய தெய்வசிகாமணி, நாகராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval