ஈரோடு மஞ்சள் உற்பத்திக்கு பெயர் போனது. சத்தியமங்கலம் அடுத்த வேடசின்னானுர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேளாண் துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று மஞ்சள் உற்பத்தி தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இந்தியா வந்தது. அவர்களை வேளாண்துறை அதிகாரிகள் ராமமூர்த்தியிடம் அழைத்து வந்தனர்.அந்த குழுவினருக்கு முழு ஒத்துழைப்பை ஆர்வத்துடன் அளித்தார் ராமமூர்த்தி. இதனால் உற்சாகத்தில் நெகிழ்ந்த தாய்லாந்து விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள், தங்கள் நாட்டிற்கு ராமமூர்த்தியை அழைத்தனர்.
அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்ட நிலையில், அங்கு நேரில் சென்று அவர்களுக்கு மஞ்சள் சாகுபடி பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.
பயணம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தாய்லாந்தின் சிங்கராய் மாகாண கவர்னர் நேரடியாக விமான நிலையம் வந்து, ராமமூர்த்திக்கு பூங்கொத்து கொடுத்து, மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்துள்ளார்.
தாய்லாந்து நாட்டில் இதுவரை மஞ்சள் விவசாயம் இல்லாத நிலையில், ராமமூர்த்தி அந்நாட்டு வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.
8வது வரை மட்டுமே படித்த தனக்கு இந்த பெருமையை தேடிக் கொடுத்தது, எங்கள் குடும்பம் செய்து வந்த விவசாயம் தான் என அந்த ராமமூர்த்தி பெருமையுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval