Friday, March 7, 2014

10 துண்டாக உடைந்து சிதறிய ‘பூமியளவு’ எரிகல்... தொலைநோக்கியில் நேரடியாக பார்த்த விஞ்ஞானிகள்


வாஷிங்டன்: வாஷிங்டன் விண்வெளியில் ஒரு எரிகல் உடைந்து சிதறிய அரிய காட்சியைப் பார்த்துள்ளனர் விண்வெளி ஆய்வாளர்கள். 

ஒரு எரிகல் உடையும்போது தரையிலிருந்தபடி அதை ஆய்வாளர்கள் தொலைநோக்கி மூலம் நேரில் பார்ப்பது இதுவே முதல் முறையாகும்.

பத்து துண்டுகளாக அது சிதறியதாகவும், மிகவும் மெதுவான வேகத்தில் அது போய்க் கொண்டிருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்3 எரிகல்... 

அந்த எரிகல்லின் பெயர் P/2013 R3 என்பதாகும். இது அரிஸோனாவில் உள்ள ஒரு தரை தொலைநோக்கி மூலம் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.


ஆய்வு... 

தொடர்ந்து அந்த எரிகல்லை விஞ்ஞானிகள் ஆய்ந்து வந்தனர். அக்டோபர் 1ம் தேதியும் இதேபோல மானா கீ பகுதியில் உள்ள கெக் அப்சர்வேட்டரி மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தபோது அந்த எரிகல்லானது 3 பகுதிகளாக மாறியதைப் பார்த்தனர்.

பூமி அளவு.... 

ஒவ்வொரு பகுதியும் தனித் தனித் துண்டாக இருந்தது. ஒவ்வொன்றும் பூமியின் சுற்றளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

10 துண்டுகளானது... 

சிறிது நேரத்தில் அது மேலும் சில துண்டாக பிரிந்தது. அதாவது 10 துண்டுகளாக சிதறியது. ஒவ்வொரு துண்டும் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவில் இருந்தது.

வால் நட்சத்திரம் போன்ற தோற்றம்...

மாபெரும் புகைப்படலமாக வாலுடன் கூடியதாக அந்த எரிகல்லின் துண்டுகள் காணப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு வால் நட்சத்திரம் போல அவை காணப்பட்டன.

பிரம்மிப்பு....

இதில் நான்கு பெரிய சைஸ் துண்டுகளின் சுற்றளவு 365.76 மீ்ட்டர் ஆகும். இந்த பாறைத் துண்டுகள் சிதறி விழுவதைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்ததாக விஞ்ஞானி ஜெவிட் என்பவர் கூறினார்.
   

1.6 கிமீ வேகம்.... 

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்த எரிகல் உடையத் தொடங்கி விட்டதாம். மணிக்கு 1.6 கிலோமீ்ட்டர் வேகத்தில் இது நகர்ந்து வந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் கருத்து... 

வேறு ஒரு எரிகல்லுடன் அது மோதியிருக்கலாம் அல்லது அந்த எரிகல்லுக்குள் உள்ள குளிரான பகுதி வெப்பமடைந்து அது சிதறியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

2 லட்சம் டன் எடை...

தற்போது இந்த ஆஸ்டிராய்டின் சிதறிய துண்டுகள் விண் கற்களாக மாறியுள்ளன. இவற்றின் எடையானது 2 லட்சம் டன்களாகும்.

பூமிக்கும் வரலாம்... இவற்றில் பெரும்பாலான பகுதி சூரியனுக்குள் போய் கருகி சாம்பலாகி விடும். மிஞ்சியது ஏதாவது பூமியில் என்றாவது ஒரு நாள் வந்து விழலாமாம்.

Thank you : http://tamil.oneindia.in
தகவல் ;N.K.M.புரோஜ்கான் 
அதிரை


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval