Wednesday, March 19, 2014

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா

பாக்டீரியாக்களால் தங்கம் உருவாக்க முடியுமா???? இது நமக்கு வேண்டுமென்றால் புதுமையான கேள்வியாக இருக்கலாம், ஆனால் மேக்குயரி பல்கலைகழகத்தின் (Macquarie University) விஞ்ஞானிகள் வெனின்சுலாவில் காணப்படும் தங்க படிமானங்கள் பெரும்பாலும் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்டவை என்கின்றனர்... அதுமட்டுமில்லை இதற்கான ஆதாரத்தை ஜான்.ஆர்.வாட்டர்சன் தலைமையிலான அமெரிக்க நில ஆய்வு குழு
(US Geological Survey) அலாஸ்கா மாநிலத்தில் உறுதிப் படுத்தியுள்ளது. ஜான்.ஆர்.வாட்டர்சன் அலாஸ்க்காவில் கிடைத்த தங்க துகள்களை நுண்ணோக்கியில் (scanning electron microscope) பார்க்கும் போது அது தட்டையான உருளை வடிவத்தை கொண்டிருந்தது. இத்தகைய வடிவம் பிடோமைக்ரோப்பியம் பாக்டீரியாவை (Pedomicrobium bacteria ) ஒத்திருந்தத
     Gold-Coins-and-Gold-Bars.jpg         ... gold and silver that you can purchase such as coins bars or rounds in
அறிவியல் கூற்றின் படி தங்கம் பாக்டீரியாவின் செல் சுவரில் உள்ள நுண்துளைகளை அடைத்து அதன் உணவு சுழற்சியையும் கழிவு வெளியேறுதலையும் தடுத்து அதனை மரணமடைய செய்கிறது. பெரும்பாலான பாக்டீரியாக்கள் இரண்டாக பிரிந்தே தன் இனத்தை விருத்தி செய்கின்றன.

ஆனால் பிடோமைக்ரோப்பியம் அரும்புதல் (budding ) முறையில் இனவிருத்தி செய்கிறது. அது தன் செல்லில் இருந்து ஒரு நெடிய காம்பை உருவாக்கி, தாய் பாக்டீரியாவிலிருந்து தொலைவில் தனது புதிய பாக்டீரியாவை உருவாக்குகிறது. இந்த புதிய உயிர், இறந்து போன தாய் பாக்டீரியாவிற்கு வெளியே புதிதாக உதிக்கிறது. இத்தகைய வளர்ச்சி மிக மெதுவாகவே நடை பெறுகிறது. நமது தலைமுடியின் திண்ணம் அளவு (
சராசரி 0.1 mm) தங்கம் வளர வேண்டுமென்றால் ஒரு வருடம் ஆகிறது. (இத்தகைய வளர்ச்சியை ஜெனிடிக் இஞ்சிநியரிங் மூலம் துரித படுத்த இயலும்).

கனடாவை சார்ந்த அறிவியலாளர்கள் சிலர் உலோக தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியாவை கண்டுப்பிடித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி அவை தங்க அணுக்களை துகள்களாய் உறைய வைத்து தங்க பாளமாக மாற்றுகின்றன. டெல்ப்டியாஅசிடோவோரன்ஸ் (Delftia acidovorans) விஷத்தன்மை வாய்ந்த கரையும் தங்கத்திடம் (soluble gold) இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னை சுற்றி உலோக தங்கத்தை உருவாக்கி கொள்கிறதாம்.
உலோகத் தங்கம் பொதுவாக ஒப்பீட்டளவில் மந்த தன்மை வாய்ந்தது. அவற்றை நாம் ஆபரணமாக அணிந்து கொள்ளலாம். அவற்றை உரசி பருகியும் கொள்ளலாம். அதே நேரம் தங்க அயனிகள் விஷத்தன்மை ஆனவை. தங்க அயனிகளை உலோகமாக மாற்ற காரணமான டெல்ப்ட்டிபேக்டின் (delftibactin) ஜீன்களை
கனட அறிவியலாளர்கள் இந்த பாக்டீரியத்தில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

இதே மாதிரியான பழமையான தங்க பாளங்களை தென் ஆப்பிரிக்காவிலும் (2.8 பில்லியன் வருட பழமை), சீனாவிலும் (220 மில்லியன் பழமை) கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஆம், இத்தகைய தங்க பாளங்களை உருக்கினால் பாக்டீரியாவில் இருந்து கார்பன், கார்பன்-டை-ஆக்சைட்டாக மாறி, தூய தங்கத்தை நமக்கு விட்டுச் செல்கிறது.

சிலர், பாக்டீரியா தங்கத்தை உருவாக்குவதில்லை, மாறாக நிலத்தடி நீரில் உள்ள தங்கத்தை ஈர்த்துக் கொள்கிறது என்கின்றனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் தங்கச் சுரங்கங்களின் கழிவிலிருந்து மேலும் தங்கத்தை பிரித்தெடுக்க உதவும்.

நமக்கெல்லாம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எப்படி இந்த பாக்டீரியாக்களால் தங்கத்தை 24 காரட் அளவு தூய்மை படுத்த முடிகிறது? இத்தகைய பாக்டீரியாக்களை அறிவியல் கூடங்களில் வளர்க்க ஆரம்பித்து விட்டால், ஒரே இரவில் பெரும்பணக்காரர் ஆகி விடலாம். இப்பொழுது நமக்கு கிரேக்க பேராசைக்காரன் மைதாஸ் தான் நினைவுக்கு வருகிறான். ஒருவேளை அவன் இந்த பிடோமைக்ரோபியமால்
பீடிக்கப் பட்டிருப்பானோ? எது எப்படியோ, தங்கம் என்றாலே கலகம் தானோ? அதுவும் அளவுக்கு மீறினால்???

Thank you : http://eluthu.com

தகவல்;N.K.M.புரோஜ்கான் அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval