Saturday, March 22, 2014

அர்த்தமுள்ள வரிகள்

அதிக வலிமை உள்ளவரும் அதிக செல்வம் உடையவரும் நியாயத்தை சொன்னால் கேட்மாட்டார்கள் 

# சொர்க்கத்திற்கு போனால் நீங்கள் மூன்று ஆச்சரியங்களை காண்பீர்கள். அங்கே இருக்க மாட்டார்கள் என்று நீங்கள் கருதிய சிலர் அங்கே இருப்பது. அங்கே இருப்பார்கள் என்று கருதிய சிலர் இல்லாமல் போவது. மூன்றாவது நீங்கள் அங்கே இருப்பது. 

# உன்னை விட அதிர்ஷ்டம் குறைந்தவனிடம் உன்னுடைய இன்பத்தை பற்றி பேச வேண்டாம். 

# கலை என்பது நான் விஞ்ஞானம் என்பது நாம். 

# பசித்து மெலிந்த சுதந்திரம், தின்று கொழுத்த அடிமைத்தனத்தை விட மேல் 

# செல்வந்தன் கடவுளை தன் பணப்பையில் வைத்திருக்கிறான். ஏழை தன் இதயத்தில் வைத்திருக்கிறான். 

# ஆண்டுகள் எத்தனையோ விஷயங்களை போதிக்கின்றன. ஆனால் அவற்றை நாட்கள் உணர்வதில்லை. 

# உனக்கு எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டாலும் பிறருக்கு தெரியாமல் சமாளித்து கொள். திருடனுக்கு தேள் கொட்டினால் வெளியில் தெரியுமா? 

# இசை வாத்தியங்கள் அனைத்தையும் ஒரு பேரிகை அமுக்கிவிட முடியும். ஆயினும் அவற்றின் இடத்தை அது அடைய இயலாது. 

# போக போக பார்க்கலாம்என்கிற தெருக்களின் வழியே செல்பவன் ஒருக்காலும் முடியாது என்கிற வீட்டை அடைகிறான். 

# அந்நியர்கள் நிலத்தில் மேயக்கூடாது என்பதற்காக நம் பசுவை கட்டிப்போடுகிறோம். அந்த நிலத்தின் பயிர் சேதம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் கட்டி போடுவதில்லை. நம் பசு அடிபடாமல் இருக்கு வேண்டும் என்று அதைக் காக்கவே கட்டிப்போடுகிறோம். இவ்வாறே சமையக் கோட்பாடுகளும் நாம் பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் காப்பாற்றவதோடு நம்மை காப்பாற்றவும்
விதிக்கப்பட்டவை. 

நன்றிகள் :குமுதம் பக்தி

தகவல்;N.K.M.புரோஜ்கான் அதிரை

1 comment:

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval