மும்பை: இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்தில் அச்சடிப்பைதை தவிர்த்து
பிளாஸ்டிக் இழைகளில் அச்சடிக்க ரிசர்வ் வங்கி 2010ஆம் ஆண்டு துவக்கத்தில் முடிவு செய்தது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி பிளாஸ்டிக் இழைகளில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் துவங்கியது.
இந்த ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் ஒரே சமையத்தில் வெளியிடாமல் சோதனை முயற்சியாக சில நகரங்களில் மட்டும் செயல்படுத்த ரிசரவ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த நகரங்களில் சென்னை உள்ளதா??
10 ரூபாய் தாள்கள்
முதற்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்பட உள்ளது, இதற்கான டெண்டரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதுவரை சுமார் 8 நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் வந்துள்ளன, விரைவில் ரிசர்வ் வங்கி இதை பரிசீலனை செய்யும் என எதிர்ப்பார்கபடுகிறது.
தொழில்நுட்ப பின்னடைவு..
பிளாஸ்டிக் ரூபாய்களை அச்சடிக்கும் தொழில்நுட்பத்தில் இந்திய இன்னும் மேம்பாட வேண்டும், எனவே இந்த நாணயங்கள், வெளிநாடுகளில் உள்ள மிகுந்த பாதுகாப்புடன் கூடிய ரகசிய இடங்களில் தயாரிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வரலாறு
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 1968ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டாலர்கள் அச்சடிக்கப்பட்டது. இது மிகவும் பாதுகாப்பானது. இத்தகைய பிளாஸ்டிக் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சிட முடியாது.
பிற நாடுகள்
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் பிளாஸ்டிக் நாணயங்களை பயன்படுத்துகிறது. இதை தவிர உலகின் 30 நாடுகள் பிளாஸ்டிக் நாணயங்களை பயன்படுத்துகிறது
முக்கியமான ஒன்று
பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்து பொரும்பாலன நாடுகள் குளிர் பிரதேசம் ஆகும். நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு பிளாஸ்டிக் ரூபாய்கள் தாக்குப்பிடிக்கின்றனவா? என்பதையும் சோதித்து அறிய வேண்டியுள்ளது என ரிசர்வ் வங்கி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
5 நகரங்கள்
ரிசர்வ் வங்கி திட்டமிடப்பட்ட படி நூறு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய்களை நோட்டுகளை கேரளாவின் கொச்சி, கர்நாடகத்தின் மைசூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா ஆகிய 5 நகரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியா
இந்த புதிய முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து, படிப்படியாக நாடு முழுவதும் பிளாஸ்டிக் ரூபாய்களை நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
Thank you : http://tamil.goodreturns.in
பதிப்பு ;N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval