டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வரும் லோக்சபா தேர்தலுக்கான தேதிகளை வெளியிட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 81.5 கோடி மக்கள் இணைந்து இந்தியாவிற்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
ஆனால், "ஓட்டுரிமை" சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனும் தனக்கான "வாக்காளர் அடையாள அட்டை" என்ற அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டியது முக்கியமானது.
மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்திய பொதுத் தேர்தலான இதில் பங்கேற்க ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் அடையாள அட்டையைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதோ உங்களுக்காக அதற்கான எளிமையான வழிமுறைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன
1.உங்களைப்பற்றிய விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய:
இங்கே சொடுக்கவும்.
http://eci-citizenservices.nic.in/frmmobileverification.aspx?type=FORM6
2.அல்லது "பார்ம் 6" மூலம் தேர்தல் முகாம்களில் உங்களது விவரங்களை மார்ச் 11 அன்று பதிவு செய்து கொள்ளலாம். ஃபார்ம் 6:
http://eci-citizenservices.nic.in/frmmobileverification.aspx?type=FORM6
3.இந்தியாவின் குடிமகனான நீங்கள், இந்தியாவிற்கு வெளியில் வசித்து வந்தால் பார்ம் 6A வை பூர்த்தி செய்து அடையாள அட்டையை பெறலாம்.
http://eci-citizenservices.nic.in/frmmobileverification.aspx?type=FORM6A
4.உங்களது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தால் ஃபார்ம் 8ஐ பூர்த்தி செய்து திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஃபார்ம் 8 க்கு:
இங்கே கிளிக் செய்க
http://eci-citizenservices.nic.in/frmmobileverification.aspx?type=FORM8
5.உங்களது நிரந்தர முகவர் தவறாக இருந்தால் அதனை ஃபார்ம் 8A வின் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஃபார்ம் 8A விற்கு:
இங்கே சொடுக்குக
http://eci-citizenservices.nic.in/frmmobileverification.aspx?type=FORM8A
Thank you : http://tamil.oneindia.in
தகவல் ;N.K.M.புரோஜ்கான்
அதிரை
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval