Tuesday, March 11, 2014

வாழைப்பழங்களில் கொடிய சிலந்திகள்: இங்கிலாந்து குடும்பம் அதிர்ச்சி

லண்டன், மார்ச்.11-

இங்கிலாந்தின் ஸ்டாபோர்ட்ஷயர் நகரில் வசித்துவரும் ஜேமி(31) மற்றும் கிறிஸ்டல் ராபர்ட்ஸ்(30) தம்பதியர் தாங்கள் வசிக்குமிடத்திற்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாழைப்பழங்கள் வாங்கியுள்ளனர்.
வீட்டிற்கு வந்ததும் பழங்கள் இருந்த அட்டைப்பெட்டியை ஜேமி பிரித்துள்ளார். அப்போது பழத்தின்மீது வெள்ளை நிறத் திட்டுகள் இருந்ததைக் கண்ட அவர் அவை ஏதோ பாதிப்பிலாத அச்சுகள் என்று எண்ணிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அவற்றை உன்னிப்பாகப் பார்த்தபோதுதான் அந்த பழங்களைச் சுற்றிலும் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பதையும், நூற்றுக்கணக்கான சிலந்திகள் அந்த வலையில் இருப்பதையும் கண்டு அதிர்ந்துபோனார். திடீரென அவை அனைத்தும் ஒன்றாக அசையத் தொடங்கியதும் திகில் படம் ஒன்றினைப் பார்ப்பதைப் போல் உணர்ந்த ஜேமி பதறி வீட்டைவிட்டு வெளியே ஓடினார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவியும், இரண்டு குழந்தைகளும் மிர்ரர்.கோ என்ற பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஆலோசனைப்படி வீட்டைவிட்டு வெளியேறினர்.
               
வாழைப்பழங்களில் கொடிய சிலந்திகள்: இங்கிலாந்து குடும்பம் அதிர்ச்சி
அதன்பின்னர் அங்கு வந்த அந்த நிறுவனத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த சிலந்திகளை அழித்தனர். இவை பிரேசில் நாட்டைச் சேர்ந்த கொடிய அலையும் சிலந்திகள் வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் என்று அவர்கள் சந்தேகித்தனர். மிகவும் நச்சுத் தன்மை கொண்ட அந்த சிலந்திகளின் விஷம் ஒரு பாம்பினுடைய விஷத்தைவிட 30 மடங்கு அதிகம் என்று கூறப்படுகின்றது. இந்த சிலந்திகள் கடித்தால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், வாந்தி போன்றவற்றுடன் இறுதியில் மரணமும் ஏற்படக்கூடும் என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வீடு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழிந்த பின்னரே அந்தக் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நன்றி ;மாலை மலர் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval