ஆடாதொடை தமிழக்ம் முழுவதும் காணப்படும் ஒரு குறுஞ்செடியினம். நீண்ட ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளை நிறப்பூக்களையும் உடைய செடி. சளி, இருமல், வயிற்றுபூச்சிகளை போக்குவதில் அருமருந்து இது.
1. இலைச்சாற்றை சில துளிகள் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்தவாந்தி, மூச்சுத்திணறல், இரத்தம் கலந்த சளி குணமாகும்.
2. இலைச்சாற்றை எருமைப்பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர சீதபேதி, இரத்தபேதி குணமாகும்.
3. இதன் 10 இலைகள் எடுத்து நீரில் போட்டு காய்ச்சி தேனுடன் கலந்து 40 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வர என்புருக்கி, சளிசுரம், விலாவலி ஆகியன குணமாகும்
.
4. ஆடாதொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் கலந்து இடித்து அதில் 1 கிராம் வீதம் தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தீரும்.
5, இதன் உலர்ந்த இலைகளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைபிடிக்க மூச்சுத்திணறல் தீரும்.
6, இதனுடன் கலந்து செய்யப்படும் ஆடாதொடை மணப்பாகு ஆகியவை குணமாகும். குரல் இனிமை கிடைக்கும். ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம் அனைத்து சுரங்களுக்கும் குணமளிக்கக் கூடியது.
8. கருவுற்ற பெண்கள் இதன் வேரில் கஷாயம் வைத்து கடைசி மாதத்தில் அருந்தி வர சுகப்பிரசவம் உண்டாகும்.
Thank you : http://eluthu.com/
பதிப்பு ;N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval