Wednesday, March 26, 2014

மலேசிய விமானத்தின் கடைசி 54 நிமிடங்களில் நடந்தது என்ன ?

article-2283321-18357F73000005DC-753_964x599மாயமாவதற்கு முன்பாக மலேசிய விமானத்தின்அறையில் நடந்த சம்பாஷனைகளின்  முழு பதிவின் விவரங்கள் பிரிட்டிஷ் செய்தித்தாளான டெலிகிராப்பில்  வெளியாகியுள்ளது.
இந்த பதிவானது மலேசிய விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பியதில் இருந்து அதனுடைய கடைசி செய்தி 1.07க்கு பதிவான வரையிலான 54 நிமிடங்களை விவரிக்கிறது. விமானி மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு இடையேயான இந்த பேச்சு மாண்டரின் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளார்கள்   இதைபற்றி   கூறும்போது,    இவை   எப்போதும் நடைபெறும் சாதாரண தகவல் பரிமாற்றம்தான் என்ற போதும்,  சில செய்திகள் வழக்கத்திற்கு மாறாக உள்ளன என்று  கூறியுள்ளனர்.
அந்த ஆராய்ச்சி தகவலின்படி, விமானிகள் 35,000 அடி உயரத்தில் பறப்பதாக அந்த உயரத்தை அடைவதற்கு 6 நிமிடங்கள் முன்னதாகவே பதிவு செய்துள்ளனர். இது ஏன் என்று தெரியவில்லை. இன்னொரு அசாதாரணமான விஷயம் என்னவென்றால், விமானத்தின்   தகவல்   தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும்,   ஹோசி மின் சிட்டியில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தின் கட்டுப்பாட்டை கோலாலம்பூர் விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மாற்றிய சமயத்தில்தான், விமானம் தனது வழக்கமான   பாதையிலிருந்து   திரும்பி   மேற்கு   நோக்கி   பயணிக்க   ஆரம்பித்துள்ளது.
                                             article-2283321-18357F73000005DC-753_964x599
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஸ்டீபன் பஸ்டிகன் இதைப்பற்றி கூறியபோது, “விமானத்திற்கும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் இடையூறு ஏற்பட்டால், விமான திருட்டிற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது”   என்று கூறியுள்ளார்.
இந்த பதிவானது துணை-விமானியின் “ஆல் ரைட், குட் நைட்” என்ற செய்தியுடன் முடிவடைந்துள்ளது.அதன்பின்னர் ரேடாரில் கூட விமானத்திற்கான தகவல்கள் பதிவாகவில்லை.  14 நாட்களுக்கு மேல் ஆகியும் விமானத்தின் நிலைமை சரிவர தெரியவில்லை.
அந்த சம்பாஷனையின் முழுப் பதிவுகள்:
கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறை: 00:36:30 விமானம்: ஏடிசி,இது எம்ஹெச்370, காலை வணக்கம்.
ஏடிசி (விமான கட்டுப்பாட்டு அறை): காலை வணக்கம் எம்ஹெச்370,
இது ஏடிசி கட்டுப்பாட்டு அறை, தயவுசெய்து ஏ10 32ஆர் நியாபகத்தில் இருக்கட்டும்.
00:36:50 விமானம்: ஏ10, எம்ஹெச்370 பதிவு செய்துகொண்டது
00:38:43 ஏடிசி: எம்ஹெச்370,தயவுசெய்து 32ஆர் ஏ10 ஓடுதளத்தில் இருந்து கிளம்பலாம்.
எம்ஹெச்370: ஓடுதளம் 32ஆர் ஏ10, பதிவு செய்யப்பட்டது
00:40:38 ஏடிசி: எம்ஹெச்370, பொஷிசன் 32ஆர், ஓடுபாதை தயார், கிளம்புவதற்கான ஆணை தரப்பட்டது…
இரவு வணக்கம்
எம்ஹெச்370: எம்ஹெச்370, பொஷிசன் 32ஆர், ஓடுபாதை தயார்,
கிளம்புவதற்கான ஆணை தரப்பட்டது… எம்ஹெச்370 இதை பதிவு செய்து கொண்டது…. நன்றி….. வருகிறோம்…
கோலாலம்பூர் ஏர்போர்ட்: 00:42:05 எம்ஹெச்370: விமானநிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டது
00:42:10 ஏடிசி: எம்ஹெச்370 நிலை பதிவு செய்யப்பட்டது, உயரம் 180, கட்டளையை பின்பற்றி வலதுபுறம் திரும்பவும்….எல்லை ஐஜிஏஆர்ஐ வழிப்பாதை.
00:42:40: எம்ஹெச்370: சரி.உயரம் 180 அடி, திசை ஐஜிஏஆர்ஐ வழிப்பாதை.
எம்ஹெச்370 பதிவு செய்து கொண்டது
00:42:52 ஏடிசி: எம்ஹெச்370 , நீங்கள் கோலாலம்பூரின் ரேடார் 132.6 க்குள் நுழைந்துவிட்டீர்கள். இரவு வணக்கம்…
எம்ஹெச்370: 132.6, எம்ஹெச்370 பதிவு செய்து கொண்டது.
கோலாலம்பூர் ரேடார்: 00:46:51 எம்ஹெச்370: கோலாலம்பூர் ஏடிசி,
இது எம்ஹெச்370 ஏடிசி: எம்ஹெச்370, தயவுசெய்து விமான உயரம் 250இல் பறக்கவும்
00:46:54 எம்ஹெச்370: எம்ஹெச்370 250 அடி உயரத்தை அடைந்தது.
00:50:06: ஏடிசி: எம்ஹெச்370, 350 அடிக்கு உயரவும்
00:50:06: எம்ஹெச்370: இது எம்ஹெச்370, 350 அடி உயரத்தை அடைந்தது.
01:01:14 எம்ஹெச்370: உயரம் 350 அடி 01:01:14: எம்ஹெச்370: எம்ஹெச்370 உயரம் 350 அடி
01:08:00 ஏடிசி: எம்ஹெச் 370 01:19:24 ஏடிசி: எம்ஹெச்370,
தயவுசெய்து ஹோ சிமின் சிட்டியைத் தொடர்பு கொள்ளவும் 120.9, இரவு வணக்கம்.
01:19:29: எம்ஹெச்370: சரி, இரவு வணக்கம்
இதற்குபின், மலேசிய விமானம் ஹோசி மின் சிட்டி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவில்லை. அதுதான் கடைசி தகவல் தொடர்பு.
நன்றி: மடவல நியூஸ்
courtesy;Todayindia.info

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval