Thursday, March 13, 2014

மன்மோகன்சிங்கை சந்தித்த மு.க.அழகிரி! காங்கிரசிற்கு ஆதரவா?

 பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மு.க.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
திமுக தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முகஅழகிரி கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுகவில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
                         மன்மோகன்சிங்கை சந்தித்த மு.க.அழகிரி! காங்கிரசிற்கு ஆதரவா?  
   தனால் அதிருப்தி அடைந்துள்ள முகஅழகிரி திமுகவை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
திமுகவை கடுமையாக விமர்சித்தாலும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக முகஅழகிரி செயல்பட மாட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் முக. அழகிரி ஐதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று காலை மு.க.அழகிரி சந்தித்து பேசியுள்ளார். பிறகு வெளியில் வந்த அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய மந்திரி சபையில் சேர்ந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தேன்.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பொன்முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் கோரிக்கை விடுத்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதற்கு பிரதமர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார் என்றும் இது தொடர்பாக எனது அடுத்த கட்ட முடிவு பற்றி ஆலோசனை செய்து வருகிறேன். தொண்டர்களிடம் கலந்து பேசிய பிறகு 2 மாதங்களில் எனது முடிவை தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன்சிங்கை மு.க.அழகிரி சந்தித்து பேசியது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அவர் மாறக்கூடும் என்று உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மு.க.அழகிரியின் இந்த திடீர் நடவடிக்கை திமுக மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவுக்கு எதிராக அவர் களம் இறங்குவதால் தென் மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட கூடும் என்று நினைக்கிறார்கள்.
நாளை மதுரை திரும்பும் அழகிரி தன் ஆதரவாளர்களை சந்தித்து பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் பிறகே மு.க.அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவான நிலையை எடுப்பார்களா? என்பது உறுதியாகத் தெரியவரும்.
Thanks to todayindia.info

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval