Wednesday, March 12, 2014

அமெரிக்காவின் நியூயார்கில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

நியூயார்க், மார்ச் 12-

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹர்லிம் பகுதியில்  இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர (Gas) கேஸ் வெடித்தது 
 
                         New York City emergency crew respond to report of Harlem building ...     
கிழக்கு  ஹர்லிம்  பகுதியின் 116/(பார்க் )வது தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. குண்டு வெடித்ததாக நினைத்து பொதுமக்கள் பீதியடைந்து வெளியில் வந்தனர். கேஸ் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து சிதறியதால் தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வாகனங்களில்  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து  கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது..

விபத்து நடந்ததையடுத்து, அருகில் உள்ள மெட்ரோ(NEW YORK SUB WAY) ரெயில் பாதையில் ரெயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval