Saturday, March 8, 2014

பற்களை பாதுகாப்பது எப்படி

எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்? 

பற்சிதைவைத் தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும். 

பற்களை எப்படி பாதுகாப்பது? 

பற்களை குண்டூசி மற்றும் குச்சிகளை வைத்து குத்தக் கூடாது. அப்படி குத்துவதால் ஈறுகள் பாதிக்கப்படும். புகையிலை, புகை, போதைபாக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகக் கடினமான பொருட்களை பற்களைக் கொண்டு கடிக்கவோ, உடைக்கவோ கூடாது. 
Colgate Blue Minty Gel Toothpaste 100mlCrest Pro-Health Sensitive Shield ToothpasteWest Man Toothpaste 135g (WT135Y)



                                        
     
பற்களைப் பாதுகாக்க அதிகளவு ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவுகளையும், நார்ச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிட வேண்டும். பல்வலி, பல்கூச்சம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பல் துலக்கியவுடன் ஆள்காட்டி விரலைக் கொண்டு பல் மற்றும் ஈறுகளை நன்கு தேய்க்க வேண்டும். பல் துலக்கும் பிரஷ்ஷை அடிக்கடி வெந்நீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில்
கழுவுவது நல்லது. 

தவறான பல்துலக்கும் நுட்பம் தரும் பாதிப்புகள் என்ன? 

உடலிலேயே மிக மிகக் கடினமானது, கெட்டியானது எதுவென்றால் அது பல்லின் வெளிப்புறமுள்ள எனாமல்தான். இது எலும்பை விட உறுதியானது. தவறான, முறையற்ற வகையில் பல் துலக்கும் பழக்கம் இந்த உறுதியான எனாமலையும் பாதித்து, செயலிழக்கச் செய்து, பற்சிதைவை உருவாக்கிவிடக் கூடும். அத்தோடு ஈறுகளை சிதைத்து, இரத்தம் வழியவிட்டு, புண்ணாக்கி பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
எப்பொழுதும் பதமாக, மெதுவாக பல் துலக்கிகளை உபயோகிப்பீர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கிகளை மாற்றிவிடுவது அவசியம்.

Thank you : http://eluthu.com/
தகவல் ;N.K.M.புரோஜ்கான் 
அதிரை

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval