வங்கி கணக்கு உள்ளவர்கள் பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது வாடிக்கை. தங்கள் வங்கி கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் மற்ற வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.
வங்கி கணக்கை வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளில் ஏ.டி.எம்.களில் ஐந்து முறை வரை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்று இதுவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்திருந்தது.
தற்போது அந்த கட்டுப்பாட்டை மேலும் இறுக்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மூன்று முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்கமுடியும். அதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 20 பிடித்தம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி தற்போது றிவித்துள்ளது. இத்திட்டம் பெருநகரங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட உள்ளது.
Thank You : Maalaimalar.com
பதிப்புரை;N .K .M .புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval