இந்தியாவில் பிறந்த அன்றே செத்துப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு வெறும் மூன்று லட்சம் தான். பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகளின் சதவீத பட்டியல் தான் இது.
இந்த ஆண்டு உலக அன்னையர் தின ஆண்டு..இந்த ஆய்வை சர்வதேச நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள்ளது...
உலகிலேயே தென் ஆசிய கண்டத்தில் தான் பிறந்தவுடன் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
10,000 மக்கள் தொகைக்கு வெறும் 14 டாக்டர்கள் அல்லது நர்ஸ் விகதாசாரமும், இளம் வயது திருமணமும், கருவுற்ற தாய்மார்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையும் இதற்கான காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உலகின் 176 நாடுகளில் ஏற்படும் சிசு மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகிலேயே பிறந்த முதல் நாளில் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக மூன்று லட்சத்து 9,300 குழந்தைகள் பிறந்த 24 மணி நேரத்திற்குள் இறந்து விடுவதாகவும், இது உலக அளவில் 29 சதவீதம் என்று கூறியுள்ளது அந்த அறிக்கை...இவையெல்லாம் செய்தி..வழக்கம் போல நம்ம குறுக்கீடு என்னவென்றால்,
தமிழ் நாட்டில் மட்டும் 550 இன்ஜினியரிங் கல்லூரிகள், ஏன் 550 மருத்துவக் கல்லூரிகள் திறக்கக் கூடாது..?
சென்னையில் ஒரு மருத்துவக் கல்லூரியின் ஒரு சீட் இன்றைய நிலையில் 70 லட்சம்...இவ்வளவு பணம் கொடுத்து படித்து விட்டு மருத்துவம் செய்பவர் கிட்னி திருடாமல் அல்லது மக்களை கொள்ளையடிக்காமல் வியாபாரம் செய்ய முடியுமா...?
அரசு ஆஸ்பத்திரியில் மூன்று நாள் வேண்டாம் ஒரே ஒரு நாள் தங்கிவிட்டு மரண பயம் இல்லாமல் வரமுடியுமா...?
தாய் சேய் நலவிடுதி பன்றித் தொழுவதை விட சிறப்பாக இருக்கும் நிலையில்... ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு ஆஸ்பத்திரி இவைகளையெல்லாம் முறையாக பரமாரிக்க முடியாத மாநில அரசுகளும் மத்திய அரசுகளும்
சுமார் 40,000 வருடங்கள் பொத்திப் பொத்திப் பாதுகாக்க முடியுமா அணு கழிவுகளை...?
ஒரு அணு உலைக்கு 40,000 கோடி செலவு, இதில் நியுட்ரினோ ஆய்வு நிலையத்திற்கு சுமார் 30,000 கோடி செலவு செய்யும் அரசு பெண்களுக்கும் சிசுவுக்கும் செலவு செய்ய மறுப்பது ஏன்..?
காற்றில் கலந்திருக்கும் அணுத் துகள்கள் முக்கியம்...மனித உயிர்கள் முக்கியமல்ல என்று பொருள் கொள்ளலாமா...?
சங்கிலிக்கருப்பு

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval