நான் எனது 17 வருட குறுகிய வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தேன். ஒன்றிலும் வெற்றிபெறவில்லை. என்னை உள்ளன்போடு நேசித்தவர் யாருமில்லை. யாருமேயில்லை....
எனது பெற்றோர்கள் என்னை நேசிக்கவில்லை. ஏனென்றால் உதவாப்பிள்ளைகளை பெற்றோர் நேசிக்க மாட்டார்கள்.
எனது ஆசிரியர்கள் என்னை நேசிக்கவில்லை. ஏனென்றால் மந்த புத்தியுள்ள மாணவனை ஆசிரியர்கள் நேசிக்க மாட்டார்கள்.
எனது தோழர்கள் என்னை ஏமாற்றினர். ஏனென்றால் ஒரு முட்டாளுக்கு விசுவாசமான நண்பர்களாக இருக்க அவர்களும் முட்டாள்கள் அல்ல. எனது பல நண்பர்கள் என்னை மட்டம் தட்டுவதிலேயே மகிழ்பவர்களாக இருந்தனர்.
எந்தப் பெண்ணும் என்னை நேசிக்கவில்லை. ஏனென்றால் அழகற்றதும், அறிவற்றதுமான ஒரு உருவத்தை தன் கணவன் என்று கூற எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்.
நான் ஒரு பறவையைப் போல் சிறகு விரித்து வானுயரப் பறக்க விரும்பினேன். ஆனால், என் சிறகுகளை முறித்து விட்டார்கள்.
நான் தொடர்ந்து உயிரோடிருப்பதால் யாருக்கும் பயனில்லை. அழகான, நாகரிகமான இவ்வுலகிற்கு நான் ஏன் சுமையாய் இருக்க வேண்டும்? ஏன் நான் எனது சுயபரிதாபமும், வேதனையும் நிறைந்த வாழ்வை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும்?
மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். பாதையில் நடக்கும் போதும் வரலாம். பயணம் செய்யும் போதும் வரலாம். படுக்கையில் கிடக்கும் போதும் வரலாம். அவ்வாறு மரணம் என் கதவைத் தட்டும் முன் நான் மரணத்தின் கதவைத் தட்டினாலென்ன?
நான் யாருக்காக உயிர்வாழ வேண்டும்? எதற்காக உயிர்வாழ வேண்டும்? எதற்காக மேலும் நாட்களை நீட்டி பெற்றோரின் உழைப்பையும், பணத்தையும் வீணாக்க வேண்டும்? நான் மேலும் உயிர் வாழ்வதற்கு ஒரு காரணமும் இல்லை. ஆனால் உடனே சாவதற்கோ பல காரணங்கள் உண்டு. எனது மரணத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. பலருக்கு லாபமுண்டு. என் கதையை நானே முடித்துக் கொள்வதை விட நல்ல வழி எனக்குத்
தெரியவில்லை. என் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிவராமல் இறந்திருந்தால் எனக்கு நன்றாயிருந்திருக்கும்.
எனது உடைந்து போன இதயம், எனது மரணத்துக்காக கண்ணீர் விடுபவர் எவரேனும் ஒருவர் இன்னும் இருப்பார் என்று நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கையுடனே நான் என் கல்லறைக்கு உறங்கச் செல்கிறேன்.
நான் இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைக்கு வருவதற்கு காரணம் என் முட்டாள்தனம் தான். நான் என் வாழ்நாளில் பலவற்றுக்கு ஆசைப்பட்டேன். ஆனால் ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை. நான் ஆசைப்பட்டது எனது தகுதிக்கு மேலானவற்றின் மீது என்பதை நான் காலம் கடந்த பின்பே உணர்ந்து கொண்டேன்.
சர் ஆர்தர் கானன் டாயலின் ஷெர்லாக் ஹோம்ஸில் இருந்து சில வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. ”தான் மரணிக்கும் போது தனக்காக வருந்துவதற்கு ஒரு பெண்ணையாவது சம்பாதிக்காத மனிதனை விடப் பாவி யர்ருமில்லை”. அப்படிப் பார்த்தால் என்னை விட மோசமான துரதிர்ஷ்டசாலியான பாவி யாருமில்லை.
ஏனென்றால் நான் மரணமடைந்தால் இருதுளிக் கண்ணீர் விடுவதற்கு ஒரு பெண்ணையும் நான் சம்பாதிக்கவில்லை. என் வாழ்க்கையில் நான் சம்பாதித்தவை அவமானம், வெட்கம், தோல்வி. இவ்வளவு தான். அன்பைத் தருபவர் யாருமில்லை. யாருமேயில்லை...
நான் மரணமடைந்தால் அழுவதற்கென ஒரு பெண்ணைத் தேடினேன். ஆனால் கண்டடையவில்லை. ஏனென்றால் நான் விரும்பிய பெண்களெல்லாரும் அழகு, அறிவு, அந்தஸ்து எல்லாவற்றிலும் என்னை விட பல படிகள் மேலானவர்கள் என்ற காரணத்தை உணர்ந்து கொண்டேன். ஆனால் காலம் கடந்து விட்டது.
நான் எனது வேதனைகளையும் வலிகளையும் மனதில் பூட்டி வைத்து யாரிடமும் வெளியிடாமல் இருந்தேன். ஆனால் இப்பொழுது அவை என் மனதை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டன.
எனது வேதனைகளையும, வலிகளையும் ஊமைக்காயங்களாய் உள்ளத்திலேயே அடக்கிக் கொண்டு நடைபிணமாகவே வாழ்ந்து வந்தேன்.
வலிகள் நிறைந்த வாழ்க்கையைக் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் வலிகளே வாழ்க்கையாகிப் போனால் மனிதனுக்கு மரணம் வரை நிம்மதி இல்லை.
நான் என்னை சூழ்ந்திருந்தவர்களைப் போன்று அழகுள்ளவனோ, அறிவுள்ளவனோ, செல்வமுள்ளவனோ இல்லை. நான் அவலட்சணமானவனாகவும், அறிவற்றவனாகவும் இருப்பது என் தவறாகவும் இருக்கலாம். இல்லையென்றால் என்னைப் பெற்ற என் பெற்றோருடைய பிழையாகவும் இருக்கலாம்.
நான் அழகானவளும், அமைதியானவளுமான ஒரு பெண்ணை விரும்பினேன். அதுவே என் கடைசி காதல் என்றும் மனதில் சொல்லிக் கொண்டேன். ஆனால் அது ஒருதலைராகமாகவே தொடர்ந்தது. நான் அவளிடம் என் எண்ணத்தைக் கூறவில்லை. நான் என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், ”என்னை எந்தப் பெண்ணும் காதலிக்கப் போவதில்லை. இவள் எப்படி காதலிப்பாள்? அவள் அமைதியான பெண். நான் என் காதலைக் கூறி அவள் நிம்மதிக்கு
இடையூறு ஏற்படுத்தலாமா?”. இறுதிவரை இது மவுன நாடகமாகவே தொடர்ந்தது. இறுதியில் எனக்கு பெருந்தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இது என் மனதில் ஆறாத ரணமாகவே பதிந்தது. இருக்கிற வேதனைகள் போதாதென்று இதனையும் நான் கூட்டிக் கொண்டேன்.
அவள் அழகு, அறிவு, அந்தஸ்து, நற்பண்பு இவையனைத்திலுமே என்னை விட பல மடங்கு மேலானவள். அவளைக் காதலித்ததன் மூலம் நான் ஒரு முட்டாள் என்பதை மிண்டும் நிரூபித்துக் கொண்டேன். அவள் என்னை ஏறெடுத்துப் பார்க்கப் போவதில்லை என்பதை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டேன்.
நான் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தேன். எனது தோல்விகளைக் கண்டு குதூகலித்தவர்கள் அநேகம். எனது வெற்றியில் மகிழ்ந்தவர் ஒருவருமில்லை. எனது தோல்விகளை எண்ணும் போது என் வெற்றிகள் மிக அற்பமானவை. நான் தோற்றது கடல்நீரளவு. வென்றது கைப்பிடியளவு. நான் என் வாழ்வுக்கென் ஒன்றையும் சம்பாதிக்கவில்லை. இறுதிவரை கனவுகளை மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு மனிதனுக்கு அழகிருந்தால் எந்தப் பெண்ணையாவது காதலித்துக் கரம்பிடித்து வாழ்வு நடத்தலாம். ஒரு மனிதனுக்கு அறிவிருந்தால் எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கை நடத்தலாம். ஒரு மனிதனுக்கு செல்வமும், செல்வாக்கும் இருந்தால் இஷ்டப்படி வாழலாம். இம்மூன்றுமே எனக்கு இல்லை. நான் இருந்தாலென்ன? இறந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான்.
ஒரு சுதேச மன்னர் ஆங்கிலேய அரசுக்கு எழுதிய கடிதத்தை நான் நினைவுகூருகிறேன். ”ரோசாவின் மணமும், அதன் இதழ்களும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. அதன் முள் நிறைந்த காம்பு மட்டுமே என்னிடம் இருக்கிறது”. என் வாழ்வின் இனிமை என்று நான் நினைத்தவை பறிக்கப்பட்டு விட்டன. துன்பம் நிறைந்த எதிர்காலம் மட்டுமே என் கண் முன் நிற்கிறது.
வாழ்வில் தவறுகள் செய்யலாம். ஆனால் தவறுகளே வாழ்வாகிப்போனது எனக்கு. நான் ஒரு முடிவையும் சரியாக எடுக்கவேயில்லை.
நான் எனது வாழ்வின் எல்லா பகுதிகளிலும் தோல்வியடைந்தேன். கல்வியில் தோல்வி, காதலில் தோல்வி, கைவைத்த அனைத்திலும் தோல்வி.
எனது வாழ்வில் எனக்கு ஆறுதல் கூறுபவர் எவரும் இலர். எனது தோழர்கள் என்னை மட்டம் தட்டுவதிலேயே மகிழ்ச்சியடைந்தனர். நான் விரும்பியவள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எனது பெற்றோர்கள் எனது மன அழுத்தத்தைக் கூட்டுவதிலேயே இன்பமடைந்தனர். எனது ஆசிரியர்கள் என்னை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாகவே மாற்ற விரும்பினர். யாருமே என்னை ஆசைகளும், ஆதங்கங்களும் கொண்ட
சராசரி மனிதனாகப் பார்க்கவில்லை.
எனக்கு ஏதாவது திறமைகள் இருந்திருந்தால் அவற்றுக்கு எனது பெற்றோர் காரணமில்லை. அவர்கள் எனது திறமைகளைச் சுரண்டுவதிலேயே ஆவலாக இருந்தார்களே தவிர, அவற்றை வளர்ப்பதற்கு எவ்விதத்திலும் எனக்கு உதவவில்லை. எனது திறமைகளை வளர்ப்பதற்குரிய சில கருவிகளை அவர்களிடமிருந்து கடும் போராட்டத்துக்குப் பின்பே நான் பெற முடிந்தது. எனது பெற்றோருக்கு எவ்விதத்திலும் நான்
கடன்பட்டவன் அல்ல. அவர்கள் வளர்த்தது என் உடலை மட்டுமே, அறிவை அல்ல.
என் தோழர்களில் யாருக்கும் நான் கடன்பட்டவன் அல்ல. அவர்களில் யாருமே என் மன ஆற்றலை வளர்ப்பதற்கு உதவியவர்கள் அல்ல. என்னிடமிருந்து அவர்களுக்கு எவ்வளவு கிடைக்குமோ, அவ்வளவற்றையும் சுரண்டிக்கொண்டு என்னை மனமுடைந்தவனாக மாற்றினார்கள். எனது ஒருசில தோழர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்களால் எனக்கு லாபமுமில்லை, நஷ்டமுமில்லை.
எனது ஆசிரியர்கள் யாருக்கும் நான் கடன்பட்டவன் அல்ல. அவர்களில் சிலர் என்மீது அன்பு வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்த்தார்கள். இது என் மன அழுத்தத்தைக் கூட்டி என்னை வாழ்வின் முடிவிற்கு விரட்டியது.
எந்தப் பெண்ணுக்கும் நான் கடன்பட்டவன் அல்ல. எந்தப் பெண்ணும் எனக்குக் கடன்பட்டவளும் அல்ல. எந்தப் பெண்ணும் என்னை விரும்பவில்லை. நான் விரும்பிய பெண்ணிடம் நான் என் விருப்பத்தைக் கூறவில்லை.
நான் என் வாழ்வில் இருவருக்கு மட்டுமே கடன்பட்டிருக்கிறேன். அவர்களின் பெயரை நான் கூறப் போவதில்லை.
தோல்விகளால் கலங்கினேன். இனி எதற்கும் நான் கலங்கப் போவதில்லை.
ஏனென்றால் எப்படியாவது வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்நதேயாக வேண்டும். இந்தத் தோல்விகளால் நான் பின்வாங்கப் போவதில்லை. தோல்விகளுடன் போராடியே என் வாழ்வில் இனி விதிக்கப்பட்ட நாட்களைத் தொடரப் போகிறேன். கோடைக்காலத்தையும், குளிர்காலத்தையும் போல வசந்த காலமும் உண்டு என்பதை நான் அறிவேன். அதற்காக காத்திருக்கிறேன்.
Thank You : http://eluthu.com/

பதிப்புரை;N .K .M .புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval