Sunday, August 10, 2014

ஓட்ஸ் என்னும் அரக்கன்..


Image result for oats in box imagesஇன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் கொஞ்சம் ஐரோப்பிய நாடுகளிலும் விளையும் ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.

அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய்.

எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை உள்ளது. சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கிவிட்டன.[குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட். குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்ததுபோல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.]

அங்கிருந்து இங்கு வர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம் தலையில் கட்டுகின்றன.
அதைவிட ராகி,கம்பு,சோளம்,திணை,வரகு,சாமை .. எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு.
சிந்தியுங்கள்.......


பதிப்புரை;N .K .M .புரோஜ்கான்  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval