வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக் களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.
குடல் புண் என்றால் என்ன?
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம்.
செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
செய்யக்கூடாதவை
1. புகைபிடிக்கக் கூடாது.
2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
4. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
5. சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
6. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
7. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
8. மனநிலையை தடுமாற விடக் கூடாது.
9. அவசரப்படக் கூடாது.
10. கவலைப்படக் கூடாது.
11. மருத்துவ ஆலோசனைகளை அலட்சி யப் படுத்தக் கூடாது.
செய்ய வேண்டியவை
1. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
3. அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
4. தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவை யூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
5. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச் சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
6. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
7. இருக்கமாக உடை அணியக் கூடாது.
8. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
9. யோகாசனம், தியானம் முதலிய வற்றைப் பயில வேண்டும்.
10. எப்போதும் ஜாலியா இருக்க வேண்டும்
11. அலுவலக வேலைகளை அங்கே யே விட்டுவிட வேண்டும்.
12. முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
13. சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன?
பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
சத்தான சரிவிகித உணவு:
1. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
2. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண் டும்.
3. டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
4. வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
5. மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
7. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமில மானது நீர்த்துப் போய் விடுகிறது.
8. பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.
நன்றி நிலவைதேடி

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval